Google Doodle for Valentine's Day என்னவென்று கவனித்தீர்களா?

Google Doodle...
Google Doodle...

கூகுள் லோகோவில் ஏற்படும் தன்னிச்சையான, மகிழ்ச்சிகரமான மாற்றங்களே கூகுள் டூடிலாகும். உள்ளூர் முதல் உலகம் முழுவதும் ஏற்படும் பிரபலமான நிகழ்வுகளோ  அல்லது பண்டிகையின் போதோ கூகுள் லோகாவை மாற்றுவார்கள். டூடில்கள் நிலையான விளக்கம்,  அனிமேஷன், விளையாட்டு, ஸ்லைட் ஷோ, வீடியோக்கள் போன்று அமைக்கப்பட்டிருக்கும். 25 வருட கூகுள் வரலாற்றில், இதுவே அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது.

டூடில் உருவான கதை எப்படி தெரியுமா? 1998ல் கூகுள் நிறுவனரான லேரி பேஜ் மற்றும் செர்ஜி பிரைன் சில நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு நவேடாவில் நடக்கும் பேர்னிங் மேன் விழாவிற்கு செல்ல வேண்டும் என்று யோசித்தனர். ஆனால் அவர்கள் வேலையில் இல்லை என்பதை எல்லோருக்கும் தெரிவிக்க வேண்டுமே என்று நினைத்தனர். அதனால் கூகுளில் உள்ள ‘O’ வை மாற்றிவிட்டு பேர்னிங் மேன் லோகோவை போட்டுவிட்டனர். இதுவே முதல் முதலாக கூகுள் டூடில் உருவான கதை.

இதுவரை 5000 டூடில்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றது. டூடிலை உருவாக்குபவர்களை ‘டூடிலர்ஸ்’ என்று கூறுவார்கள். உலகில் உள்ள கலைஞர்களுடனும், படைப்பாளிகளுடனும் டூடிலை உருவாக்க கைக்கோர்ப்பதுண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு வருடமும் கூகுளுக்கு ஆயிரக்கணக்கான டூடில்கள் வருகின்றது. எனினும் இதை செயல் முறைப்படுத்த எடுத்துக்கொள்ளும் நேரம் ஒரு வருடமாகலாம் அல்லது சில நேரங்களிலே கூட எடுக்கலாம்.

நீங்களும் உங்கள் டூடில்களை கூகுளுக்கு அனுப்ப வேண்டுமென்றால் நீங்களும் அனுப்பலாம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

முதல் முதலில் 1998ல் உருவாக்கிய டூடில், ஆகஸ்ட் 30ல் பேர்னிங் மேன் பண்டிகைக்காக உருவாக்கப்பட்டதாகும்.

மே1, 2001 ல் முதல் ஏலியன் சீரிஸாக டூடில் வந்தது.  2000ல் கூகுள் தனது முதல் சர்வதேச டூடிலை வெளியிட்டது. பிரான்ஸ் நாட்டிலே நடக்கும் ‘பேஸ்டிலே’ என்னும் நாளை  கொண்டாடுவதற்காகவேயாகும்.

அக்டோபர் 31, 2000 ஹாலோவின் நாளை கொண்டாட அனிமேஷனை முதல்முறையாக பயன்படுத்தியது.

2005ல் கூகுள் நடத்திய டூடிலுக்கான போட்டியில் K12 மாணவர்களை  வைத்து நடத்திய போட்டியே கூகுள் டூடிலில் நீண்ட நேரம் நடந்த போட்டியாகும்.

இதையும் படியுங்கள்:
மண மணக்கும் திடீர் பூண்டு பொடி!
Google Doodle...

முதல் முதலில் கூகுள் டூடிலில் விளையாட்டை கொண்டு வந்தது, 30ஆவது ‘பேக் மேன்’ என்னும் விளையாட்டின் ஆண்டு விழாவை கொண்டாடும் விதத்திலே என்பதாகும்.

2011ல் டூடில் முழு வீடியோ பதிவை வெளியிட்டது சார்லி சாப்ளினின் 122ஆவது பிறந்நாளை முழு நீள காணொளியாக டூடிலில் வெளியிட்டது. 2012ல் முதல் மல்டிமீடியா டூடில் வெளியானது. 2018 முதல் 360 டிகிரி காணொளியை டூடில் வெளியிட்டது. 2019ல் ஜோகன் செபெஸ்டின் பேச்சின் இசையை கொண்டாட முதல் AI டூடில் உருவாக்கப்பட்டது. 2021ல் மல்ட்டி பிளேயர் டூடலை உருவாக்கியது. இது உலகத்தில் உள்ள அனைவரும் கலந்து கொண்டு விளையாட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று உள்ள கூகுள் டூடில் வேலன்டைன் டேவிற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. டூடில் இன்று வேலன்டைன் டேவிற்காக வேதியலில் உள்ள பிணைப்பை பயன்படுத்தியுள்ளது. இதில் பயனர்கள் தங்களுக்கு எந்த வேதியியல் கூறு தன்னுடைய குணத்துடன் பொருந்துகிறது என்பதை அறிந்து கொள்ளலாம். இன்றைய கூகுள் டூடிலில் 'கெமிஸ்ட்ரி ஆப் லவ்’ என்ற தலைப்பில் டூடிலை உருவாக்கியது வேலன்டைன் டேவில் மிகவும் தனித்துவமாகவும் அழகாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com