உலகிலேயே நோபல் பரிசு பெற்ற ஒரே பிரதமர் இவர்தான்!

ஜனவரி 24, வின்ஸ்டன் சர்ச்சில் நினைவு தினம்
The only Prime Minister in the world to have won the Nobel Prize
The only Prime Minister in the world to have won the Nobel Prize
Published on

லக வரலாற்றில் தனித்துவமிக்க தலைவராக சர்ச்சில் போற்றப்படுகிறார். வின்ஸ்டன் லியோனார்ட் ஸ்பென்சர் சர்ச்சில் 30 நவம்பர் 1874ம் ஆண்டு இங்கிலாந்தின் பாரம்பரியமான அரசியல் குடும்பத்தில் பிறந்தார். ஹாரோ மற்றும் சாண்ட்ஹர்ஸ்டில் கல்வி பயின்றார்.

1899ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலோ - போயர் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் அது. போர் தொடர்பான செய்திகளை சேகரித்ததற்காக சிறை பிடிக்கப்பட்டார் இளம் பத்திரிகையாளரான வின்ஸ்டன் சர்ச்சில். ஆம், அடிப்படையில் ஓர் எழுத்தாளர் என்பதே சர்ச்சிலின் அடையாளம். துணிவையும், வீரத்தையும் மட்டுமே துணையாகக் கொண்ட 25 வயது பத்திரிகையாளரான அவர், ஓடும் ரயிலில் இருந்து குதித்து தாயகம் திரும்பினார். பாரம்பரியமான அரசியல் குடும்பத்தில் பிறந்ததால், சர்ச்சிலுக்கும் அரசியல் ஆசை வந்தது. அவரது பார்வை அரசியல் பக்கம் திருப்பியது. தந்தையும் அரசியல்வாதி என்பதால், அவர் அரசியலில் நுழைவது ஒன்றும் கடினமாக இல்லை.

26 வயதில் முதன் முதலாக பிரிட்டன் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த சர்ச்சில், 1914 முதல் 1918ம் ஆண்டு வரை நடந்த முதல் உலகப் போரின்போது தனது போர் வியூகத்தாலும், வசீகரிக்கும் பேச்சாலும் கவனம் பெற்றார். அரசியலின் நுணுக்கங்களை அறிந்த அவர், உலகம் ஓர் இருண்ட காலத்தில் சிக்கி அல்லாடியபோது, பிரிட்டனின் பிரதமராக 10 மே 1940 முதல் 26 ஜூலை 1945 வரை பொறுப்பேற்க நேர்ந்தது. பின்னர் மீண்டும் 26 அக்டோபர் 1951 முதல் 6 ஏப்ரல் 1955 வரை.

இதையும் படியுங்கள்:
வயிறு குலுங்க சிரிப்பதால் ஏற்படும் நன்மைகள்!
The only Prime Minister in the world to have won the Nobel Prize

ஹிட்லர், முசோலினி போன்ற சர்வாதிகாரிகளின் கை ஐரோப்பாவில் ஓங்கியிருந்தது. உலகம் பாசிசத்தின் கால்களின்கீழ் கொண்டுவரப்படுவதைத் தடுத்த ராஜதந்திரிகளில் ஒருவர் சர்ச்சில். குறிப்பாக, ஹிட்லரின் நாஜி படை இங்கிலாந்தை நோக்கி முன்னேறியபோது, ஒப்பற்ற வியூகத்தால் தாய்நாட்டை காத்தார் சர்ச்சில்.

அரசியலராக, சிறந்த பேச்சாளராகத் திகழ்ந்தாலும் சர்ச்சிலுக்கு எழுத்தாளர் என்ற மற்றொரு பக்கமும் உண்டு. கல்லூரி வாசலைக் கூட மிதிக்காத அவர், மறுபுறம் தீவிர வாசகராகத் திகழ்ந்தார். ஏராளமான நூல்களை வாசித்தார். புத்தகங்கள் ஊட்டிய அறிவால் மிகச் சிறந்த எழுத்தாளராகவும் மிளிர்ந்தார். அதற்கு சிகரம் வைக்கும் விதமாக இரண்டாம் உலகப் போரை பற்றிய அவரது 6 தொகுப்புகளுக்கு. இலக்கியத்துக்கான நோபல் பரிசு 1953ல் வழங்கப்பட்டது. இப்பரிசை வென்ற ஒரே பிரிட்டிஷ் பிரதமர் அவர்தான்.

இரண்டாம் உலகப் போரின் நாயகனாக விளங்கிய வின்ஸ்டன் சர்ச்சில் வில்லனாகவும் பார்க்கப்பட்டார். சர்ச்சிலின் வரலாற்றுப் பக்கங்களில், விமர்சனங்களுக்கும் இடமில்லாமல் இல்லை. இரண்டாம் உலகப்போர் சமயத்தில் பிரிட்டனின் ஏகாதிபத்தியத்தை விரும்பிய சர்ச்சில், காலனி நாடுகள் விடுதலை பெறக் கூடாது என்ற முழக்கத்தை முன்வைத்தவர். அந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பல லட்சம் பேர் செத்து மடிந்த வங்காள பஞ்சத்திற்கு வின்ஸ்டன் சர்ச்சில்தான் காரணம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் விமர்சிக்கிறார்கள்.

வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு திறமையான ஓவியக் கலைஞர். தனது 40 வயதுகளில் அவர் ஓவியம் வரைவதில் ஆர்வம் காட்டினார். 48 ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட ஓவியங்களை உருவாக்கினார். நேஷனல் டிரஸ்ட் கலெக்ஷன்களில் அவருடைய சில படைப்புகளைப் பார்க்கலாம். வின்ஸ்டன் சர்ச்சில் இரண்டு முறை இசை ஆல்பம் பட்டியலில் நுழைந்துள்ளார்! முதன்முதலில் 1965ம் ஆண்டில், அவரது மரணத்திற்குப் பிறகு, அவரது மிகவும் பிரபலமான பேச்சுகளின் தொகுப்புகளுக்கு இந்தப் பெருமை கிடைத்தது.

வின்ஸ்டன் சர்ச்சில் தனது உரைகளுக்கும் பேச்சாற்றலுக்கும் மிகவும் பிரபலமானவர். ஆனால், அவருக்குப் பேச்சுத் தடை இருந்தது, அதாவது 's' என்ற எழுத்தை உச்சரிப்பதில் அவருக்கு சிரமம் இருந்தது. கியூபாவில் அரசியல் நிருபராக, சர்ச்சில் இருந்தபோது சுருட்டுகள் மீது ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். அப்போதிருந்து அவர் கையில் கியூபாவில் தயாரிக்கப்பட்ட ரோமியோ சுருட்டு இல்லாமல் இருந்ததில்லை. அவரது வீட்டில், அவர் தொடர்ந்து 3,500 சுருட்டுகளை வைத்திருந்தார்.

இதையும் படியுங்கள்:
மாணவர்களின் நினைவாற்றலை மேம்படுத்தும் 9 யோகா முறைகள்!
The only Prime Minister in the world to have won the Nobel Prize

இரண்டாம் எலிசபெத் மகாராணி சர்ச்சிலுக்கு நைட்ஹுட் என்ற கௌரவத்தை வழங்கினார். மேலும், அவருக்கு 1953ல் ஆர்டர் ஆஃப் தி கார்டரின் முத்திரையை வழங்கினார். அவர் பெற்ற மற்ற எண்ணற்ற மரியாதைகளில் அமெரிக்காவின் கெளரவ குடியுரிமையைப் பெற்றதும் ஓன்று. கென்னடி 1963ல் அவருக்கு அந்த விருதை வழங்கினார்.

இதன் பிறகு சர்ச்சில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். சர்ச்சில் ஜனவரி 24, 1965ல் அவரது 90 வயதில் இறந்தார். 1965ல் வின்ஸ்டன் சர்ச்சிலின் மரணத்திற்குப் பிறகு, வின்ஸ்டன் சர்ச்சிலின் பங்களிப்பு காரணமாக 50 ஆண்டுகளுக்குப் பிறகு, 2015ல், இங்கிலாந்து நாணயங்களில் அவரது உருவம் இரண்டு முறை பொறித்து கௌரவிக்கப்பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com