

எத்தனையோ தலைவர்கள் நாட்டுக்காக பாடுபட்டுள்ளாா்கள். ஒவ்வொருவர் கொள்கைகளுக்கும் நிா்வாகத்திற்கும் நிறையவே வித்யாசங்கள் உண்டு அவர்களில் குறிப்பிட்டுச்சொல்லும்படியாக சிலர் சாதனைகள் செய்து மறைந்துள்ளாா்கள்.
தோல்விகளை வெற்றியின் படிக்கட்டுகளாய் கருதி தொடர்ந்து முயற்சி செய்து வெற்றி பெறவேண்டும் என்பதை தனது உழைப்பால், விவேகமான செயல்பாடுகளால், விடாமுயற்சியால், உயர்ந்து அமெரிக்காவின் 16 வது ஜனாதிபதியாக தலை சிறந்த நிா்வாகம் செய்த ஆபிரஹாம் லிங்கன் (Abraham lincoln) பிறந்தநாளான பிப்ரவரி 12ம் நாளில் அவரது வாழ்க்கை வரலாறை பாா்க்கலாம் (12/02/1809 - 14/04/1865).
அமொிக்காவில் கென்னடிக்கியில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தாா். அவரது தகப்பனாா் தாமஸ் லிங்கன் என்பவர் செருப்பு தைக்கும் தொழிலாளி. சிறு வயதில் தந்தைக்கு தொழிலில் உதவிய லிங்கன் தனது ஒன்பதாவது வயதில் தாயை இழந்தாா். படிக்க முடியாத சூழலிலும் கஷ்டப்பட்டு படித்து தனது கடின உழைப்பால் வழக்கறிஞர் ஆகி சட்டமன்ற உறுப்பினராய், அரசியல் பயணம் தொடங்கி, 1860ல் குடியரசுக்கட்சியின் வேட்பாளராகி தனது விடாமுயற்சியால் அமொிக்காவின் 16 வது ஜனாதிபதியாக பொறுப்பேற்றாா்.
அடிமைத்தளையை உடைத்தொிவதையே தன் வாழ்வின் லட்சியமாகக்கொண்டிருந்தாா். ஜனாதிபதியானதும் அடிமை முறையை ஆதரித்த தெற்கு மாநிலங்கள் பிாிந்து சென்று உள்நாட்டுபோா் உருவானது. 1863ல் விடுதலையை அறிவித்து, அடிமை முறையை முடிவுக்கு கொண்டுவந்தாா். இதனால் சில விரோதங்களும் வந்தன.
அதேபோல 1865ல் ஐக்கிய அமொிக்காவின் 13 வது சட்டதிருத்தம் வாயிலாக அடிமை முறையை ஒழித்தாா், அடிமைத்தனத்திற்கு எதிராக கெட்டிஸ்பர்க்கில் இவர் நிகழ்த்திய உரையானது அனைவரது கவனத்தையும் ஈா்த்தது என்பதே வரலாறு.
இவரது வாழ்வில் பலமுறை பலநிலைகளில் தோல்வியை சந்தித்தும், விடாமுயற்சியை கைவிடாமல் துணிந்து செயலாற்றினாா். ஏறக்குறைய இவரது தோல்வியை பட்டியலிடலாம்.
எட்டுமுறைக்கு மேலாக தோ்தல் தோல்வி
ஏறக்குறைய இரண்டு முறைக்குமேல் வணிகத்தில் தோல்வி.
சபாநாயகர் தோ்தலில் தோல்வி
நரம்புத்தளா்ச்சியால் மன உளைச்சல்
இது போன்ற பல தோல்விகள் பெற்றும் சோா்வடையாத ஒப்பற்றதலைவராக பணியாற்றிவர்.
ஒருமுறை கடற்பயணத்தில் ஏற்பட்ட அனுபவம், அவஸ்தை காரணமாக ஆழமற்ற நீாில் சிக்கிக்கொள்ளும் படகுகளை எளிதாக மேலே தூக்கிச்செல்ல உதவும், மிதக்கும் காற்று அறைகள் எனும் கருவியை கண்டுபிடித்தாா் (Adjustable Buoyant Chambers) இதற்காக 22/05/1849ல் காப்புாிமை பெற்ற முதல் ஜனாதிபதியே இவர்தான்.
'மக்களுக்காக அரசாங்கம்', 'மக்களுடைய அரசாங்கம்' 'மக்களால் ஆளப்படும் அரசாங்கம்' என்ற கொள்கையின் அடிப்படையில் விடாமுயற்சி, உண்மை, நோ்மை, நல்ல தூய்மையான எண்ணம், கொண்டிருந்தாலும் தோல்வி பாா்த்து துவளாதே தொடர்ந்து முயற்சி செய் வெற்றியடையலாம் என்பதை அவரது வாழ்க்கையின் மூலமாகவே நிருபித்தவர்.
உண்மையை கடைபிடி எப்போதும் என முழங்கினாா்.
அதேபோல 'உதவும் இதயம் உள்ளவர்களுக்கே விமர்சிக்க உாிமை உண்டு' என்ற அவரது பொன்மொழிகள் காலத்தால் அழியாத ஒன்றே. அடிமைமுறைய ஒழித்து மக்களாட்சியை நிறுவிய சில நாட்களில் ஜான் வில்க்ஸ்பூத் என்பரால் நாடக அரங்கம் ஒன்றில் சுடப்பட்டு 14/04/1865ல் மரணமடைந்தாா். விடாமுயற்சியே வெற்றிக்கான வழி என்பதை நிருபித்துக்காட்டிய அவர் வழி நடப்பதே சாலச்சிறந்த ஒன்றாகும்.