
உலக அளவில் நிறைய தினங்கள் கொண்டாடுவதைப் போல முட்டாள் தினம் என ஒரு தினம் கொண்டாடப்பட்டது. ஆனால் மற்றைய தினங்கள் போல இதனை தங்கள் பங்கு இருப்பதாக மற்றவர்கள் உரிமை கொள்ள முன்வர மாட்டார்கள். சிறு வயதில் பள்ளிகளில் நண்பர்களிடம், பக்கத்தில உள்ளவர்களிடம் என ஏப்ரல் 1-ம்தேதி மட்டும் ஏமாறாமல் தப்பிக்க நினைத்ததை நம்மால் இன்றும் அந்த நாளை மறக்காமல் நினைத்து சிரிப்போம். மற்றவர்களிடமும் கூறுவோம். நாமும் மற்றவர்களை ஏமாற்றி விளையாடி, இதனை இன்றும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாட்டாக ஏமாற்றுவதும், சிலர் ஏமாறுவதையும் செய்யும் தினமே ஏப்ரல் முதல் தேதியாகும். இதன் வரலாறு வந்த பின்னணியில் பல கதை உண்டு.
ஏப்ரல் மீன்கள் தினம் :
ஐரோப்பியர்கள் 1500-ம் ஆண்டில் கடைப்பிடித்ததை ஒரு பழக்கமாக ஏப்ரல் - 1 ம்தேதி மீன்கள் தினமாக கூறப்படுகிறது. அப்போது அந்த நாளின் பெயர் ஏப்ரல் மீன்கள் தினம்.
ஏப்ரல் மாத தொடக்கத்தில் பிரான்சில் உள்ள ஆறுகளிலும் நீரோடைகளிலும் நிறைய மீன்கள் இருக்குமாம், அதனால் அந்த சமயத்தில் மீன் பிடிப்பது மிகவும் சுலபம் . ஆகையால் மீன்கள் ஏமாறும் தினமாக ஏப்ரல் - 1 அன்று கருதப்பட்டது. காலப்போக்கில் அதுவே மனிதர்களை ஏமாற்றும் தினமாக அது மாற்றம் செய்யப்பட்டது. இப்படி ஏப்ரல் 1-ம்தேதி முட்டாள்கள் தினம் ஆனது.
வசந்த காலம் :
புராதன வரலாற்றில் ரோமானிய நாட்காட்டியின் படி ஏப்ரல் - 1-ம்தேதி தான் வசந்தம் ஆரம்பிக்கும். வரலாற்றில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை மிகுந்த உற்சாகமாக வசந்த காலமாக கொண்டாடியதை வரலாறுகள் குறிப்பிடுகின்றன.
ஏப்ரல் மீன் :
பிரெஞ்சுக் குழந்தைகள் காகிதத்தில் மீன் போன்று செய்து தனது நண்பர்களின் முதுகில் ஒட்டி அனுப்பி கேலி செய்திருக்கின்றனர். இப்படி முதுகில் மீனோடு தெரிகிற குழந்தைகளை பார்க்கும் குழந்தைகள் ஏப்ரல் மீன் என்று அழைத்து கேலி செய்துள்ளனர். அதுவே ஏப்ரல் முட்டாள் தினமாக ஆனது.
1986-ல் பிரெட் வால்டன் இயக்கிய 'ஏப்ரல் பூல்ஸ் டே ' திரைப்படம் மிகப் பிரபலமானது. பிரமாண்டமாக தயாரித்திருந்த படம் ஒளிநாடாவில் இருந்து நடை போட்டு வந்ததை குறிப்பாக சொல்லலாம். ஏப்ரல் முதல் தேதி பல வேடிக்கைகளும் பல வினைகளும் வந்துள்ளன. குழந்தைகளுடன் ‘ஏப்ரல் பூல்’ செய்து யாரிடமும் ஏமாறாமல் விளையாடியவர்களும் உண்டு. இதனை சிறுவர்களும் மற்றவர் மகிழ்வார்கள்.
மொத்தத்தில் ஏப்ரல் - 1 முட்டாள்களான அறிவாளிகள் தினம், வேடிக்கையாய் முட்டாள்களாக்கி மகிழ்கின்ற நாளாக தொடர்கிறது.
தொகுப்பு
வரலாறு புத்தகத்திலிருந்து..