ஹோலி ஆலாரே!

ஹோலி கொண்டாட்டம்
ஹோலி கொண்டாட்டம்

கோடை காலத்தினை வரவேற்கும் வகையில் ஹோலி பண்டிகைக்கு முதல்நாள் இரவு, மரக்கட்டைகளை கோபுரம்போல் அடுக்கிவைத்து, நெருப்பு மூட்டி தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம் மற்றும் இனிப்பு பண்டங்களை அக்னிதேவன் முன்பு படைத்து பூஜை செய்யப்படுகிறது. பக்த பிரகலாதன் உயிர் பெற்றெழுந்த நிகழ்வினை வெளிப்படுத்தும் வகையில் “ஹோலி!”, “ஹோலி ஆலாரே!” எனக் கூறியவாறே தேங்காய், இனிப்புப் பண்டங்கள் போன்றவைகளை நெருப்பிலிட்டு வணங்கி வழிபடுவதே ‘ஹோலிகா தகனமாகும்.’

இரண்ய கசிபு – பிரகலாதன்; ரதி – மன்மதன்; கண்ணன் – ராதை யெனப் பல்வேறு கதைகள் ஹோலி குறித்துக் கூறப்படுகின்றன.

ஹோலியின் விதவிதமான கொண்டாட்டங்கள்

பிருந்தாவனம்: கண்ணன் பிறந்து வளர்ந்த பிருந்தாவனத்தில் கண்ணன் – ராதையின் தெய்வீகக் காதலைக் கொண்டாடும் விதத்தில் ரங்கபஞ்சமி வரை 16 நாட்கள் விமரிசையாக ஹோலி கொண்டாடப்படுகிறது.

உத்தரப்பிரதேசம் பர்சானாவிலிருக்கும் ராதா-ராணி கோயிலின் நீண்ட வளாகத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி ஹோலியை விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். ஹோலி பாடல்களை உணர்ச்சிபூர்வமாக பாடியவாறே ஸ்ரீராதே – ஸ்ரீகிருஷ்ணாவென உரக்கக் கூறுவது வழக்கம். தவிர, பெண்களை அழைக்கும்விதமாக இருக்கும் ‘தூண்டல்’ பாடல்களை ஆண்கள் பாடுவார்கள். உடனே அதை எதிர்க்கும்விதமாக பெண்கள் லத்தியை எடுத்து தடுப்புக் கவசமணிந்த ஆண்களை அடிப்பது சுவாரசியமாகவும், தனித்துவமானதாகவும் இருக்கும்.

இதையும் படியுங்கள்:
யோகாவின் தலைநகரம் எது தெரியுமா?
ஹோலி கொண்டாட்டம்

ஒரிஸா டோல யாத்ரா கிருஷ்ண பகவான் கதைகள் குறித்து நடப்பதாகும்.  கோயில் மாதிரி அமைக்கப்பட்டு இருக்கும் பல்லக்கினுள் விக்கிரகங்கள் வைக்கப்பட்டு, அலங்கரிக்கப்பட்டிருக்கும். மக்கள் இதை தோள்களில் ஏந்தியவண்ணம் பாடியவாறே வீதி ஊர்வலம் செல்வார்கள். கலர்ப்பொடிகளை ‘ஒருவருக்கொருவர் முகத்தில் தடவுவார்கள். பொருட்காட்சி, மேளா என கலகலவென இருக்கும். பல்வேறு இடங்களிலிருந்து கொண்டு வரப்படும் பல்லக்குகள் ஓரிடத்தில் ஒன்றுகூடுவது ஹோலியின் பெரிய நிகழ்வாக திகழும்.

உத்தராகண்ட் ஹோலி தனித்துவமானது. பைதாகி ஹோலி; காடி ஹோலி; மஹிளா ஹோலி என மூன்று வகை  கொண்டாட்டங்கள் அமர்க்களப்படும்.

* கலாசார பாரம்பரிய உடைகளை அணிந்து பக்திப்பாடல்களை அனைவரும் சேர்ந்து பாடுவது பைதாகி ஹோலி.

* துணிக்கீற்றுகள் கட்டப்பட்ட கம்பத்தை கைகளில் ஏந்தியவாறு கிராமத்து மக்கள் வீதிகளில் நடந்துகொண்டே பாடுவார்கள். இது காடி ஹோலியாகும்.

* மஹிளா ஹோலியில் அநேக பெண்கள் இணைந்து பாடி கொண்டாடுவார்கள்.

ஹோலி கொண்டாட்டம்
ஹோலி கொண்டாட்டம்

நாசிக் (ரஹட் ரங் பஞ்சமி)

பாரம்பரியத் தன்மை கொண்ட ஹோலி கொண்டாட்டத்தில், ஆங்காங்கே ‘ரஹட்’ (குழிகள்) தோண்டப்பட்டு, அதனுள் கலர் தண்ணீர் விடப்படும். மக்கள் அதனுள் குதித்து நடனமாடுவார்கள். ஹோலிக்கெனவே மிட்டாய்களை வண்ண – வண்ண பூ மாலை மாதிரி செய்வார்கள். கிரிஸ்டல் சிரப் மற்றும் Food colours களை அதில் சேர்ப்பதுண்டு. ஹோலி சமயத்தில் இது பாப்புலரான ஸ்வீட் ஆகும்.

கோரக்பூர் மக்களிடையே சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இப்பண்டிகை ‘ஹோலி மிலன்’ என்று கொண்டாடப்படுகிறது.

வங்காளம்: குங்குமப் பூ நிறத்தில் இளைஞர்களும் மலர் மாலைகளை கழுத்து மற்றும் கைகளில் சூட்டிக்கொண்டு ஏக்தாரா, குப்ரி, வீணை போன்ற கருவிகளை இசைத்து அதற்கேற்ப ஆடிப்பாடுவார்கள். ‘டோல் பூர்ணிமா’ என்று ‘ஹோலி’ இங்கே அழைக்கப்படுகிறது.

இந்தியாவில் மட்டுமல்லாது, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும் ஹோலியை விமரிசையாகக் கொண்டாடுகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com