இசைக் கேட்டால் புவியே அசைந்தாடும்!

ஜூன் 21 உலக இசை தினம்!
world music day...
world music day...

லகின் பொது மொழி இசை. இனம், மொழி, நாடு என்ற எந்தப் பாகுபாடும் இன்றி அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தி இசைக்கு உண்டு. இசை காலத்திற்கு ஏற்ப பல பரிமாணங்களைக் கடந்து நவீன பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறது.

நம் வாழ்வின் எல்லா நேரங்களிலும் நம்கூட பயணிப்பதில் இசைக்கு ஒரு தனி இடம் உண்டு. இவை மன அமைதியைத் தருவதுடன் ஆரோக்கியத்திலும் முக்கியப் பங்கு வைக்கிறது.

இந்நாளில் இசை ஆர்வலர்கள் பல்வேறு இசை நிகழ்ச்சிகளை மக்களுக்கு அரங்கங்களிலும் பூங்காக்கள் போன்ற பொது இடங்களிலும் வழங்குகின்றனர். இசை என்பது கலாசாரத்தை வளர்ப்பதற்கும் மக்களை ஒன்றிணைப்பதற்கும் காரணமாகிறது.

1982ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் தேதி பிரான்சில் முதல் உலக இசை தினம் அனுசரிக்கப்பட்டது. பிரான்சில் மட்டும் கொண்டாடப்பட்ட இந்த தினம் தற்பொழுது 120க்கும் மேற்பட்ட நாடுகளில் 1000க்கும் மேற்பட்ட நகரங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.

'ஜாக் லாங்' என்ற பிரெஞ்சு அரசியல்வாதி உலக இசை தினத்தை பற்றிய யோசனையை முன்வைக்க இதை இசையமைப்பாளரான மாரீஸ் ஃப்ளெரெட்டிடம் தெரிவித்தார். அவர் ஒரு பத்திரிகையாளராக இருந்ததினால் அவர் எடுத்த முயற்சியின் பலனாக முதல் இசை தினம் பாரிசில் கொண்டாடப்பட்டது.

இளம் தொழில் முறை இசைக்கலைஞர்களை ஊக்குவிப்பதற்காகவும், உலகெங்கிலும் உள்ள இசைக் கலைஞர்களைக் கௌரவிக்கும் விதமாகவும் இந்தத் தினம் கொண்டாடப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
அனைத்திற்கும் நீங்கள்தான் காரணம்; நீங்கள் மட்டுமே காரணம்!
world music day...

உலக இசை தினம் ஐரோப்பாவில் தோன்றியிருக்கலாம். ஆனால், அது நம் நாட்டுப்புற பாடல்களையும், பழங்குடியினரின் பாடல்களையும், ஜாஸ், ராக் மற்றும் கிளாசிக்கல் போன்ற சர்வதேச வகைகளான இசையின் அனைத்து வகைகளையும் கொண்டாடுகிறது.

மதம் இனம் மொழி அனைத்தையும் தாண்டி உலகெங்கிலும் உள்ள மக்களை ஒன்றிணைக்கும் வலிமை இசைக்கு உண்டு. வேலையில் மூழ்கி இருக்கும்போது ஹம்மிங் பண்ணுவதும், குளிக்கும்போது பாடுவதும், சோகமாக இருக்கும்போது, மகிழ்ச்சியாக இருக்கும்போது என்று எங்குமே எப்பொழுதுமே எதிலுமே இசையின் பங்கு மகத்தானது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com