

விஞ்ஞானம் அபரிமிதமாக வளா்ந்து விட்டது. அதன் அடிப்படையில் அசுர வேகத்தில் இருந்த இடத்தில் இருந்தே செல்லிடை தொலைபேசி வாயிலாக பல விதங்களில் பரிவர்த்தனை உட்பட அனைத்து விஷயங்களையும் விரல் நுணியில் வைத்திருக்கும் சேவையே இணைய வழியாகும். அந்தக் காலத்தில் தகவல் பரிமாற்றம், பண பரிவர்த்தனை போன்ற பல்வேறு தகவல்களை அனுப்பி பதில் பெற காலதாமதம் ஏற்பட்ட நிலையில் இருந்து கண் மூடி கண் திறப்பதற்குள் அனைத்துப் பணிகளையும் உடனடியாக செய்து முடிக்க முடிகிறது.
மனித வாழ்க்கையில் முக்கியமான இடத்தை செல்லிடை தொலைபேசி ஆக்கிரமித்து விட்டது என்றே சொல்லலாம். அதுவும் இணையம் இல்லாமல் இதயமே இயங்காது என்ற நிலைக்கு மனிதன் தள்ளப்பட்டு விட்டான். இது அபரிமிதமான விஞ்ஞான வளா்ச்சிதான் என்றாலும், பல நன்மைகளை நமக்கு செய்தபோதிலும் சில இடையூறுகளும் இதில் படர்ந்து கிடப்பது நிஜமே. நாம்தான் இணையத்தை கவனமாகக் கையாள வேண்டும்.
இந்த இணைய வழி சேவையால் கண் மூடி கண் திறப்பதற்குள் அத்தனை விஷயங்களும் செயல் வடிவம் பெறுவதே விஞ்ஞான வளர்ச்சியின் முதற்படியாகும். அப்படிப்பட்ட இணைய சேவை தொடங்கப்பட்ட நாளான அக்டோபர் 29ல் சர்வதேச இணைய தினமாக (International Internet Day) கடைபிடிக்கப்படுகிறது. 2005ம் ஆண்டு முதல் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
1969ம்ஆண்டு அக்டோபர் 29ல் அமொிக்காவில் முதன் முறையாக இரண்டு கணினிகளுக்கு இடையில் முதல் செய்தி அனுப்பப்பட்டது. ஸ்டான் போா்டு ஆராய்ச்சி நிலையத்தில் வைத்து பேராசிாியர் லியோனாா்டு கிளீன்ராக் மற்றும் அவரது மாணவர் சாா்லி கிலைன் ஆகியோா் இணைய வழியில் முதல் செய்தியை பரிமாற்றம் செய்தனர்.
முதன் முதலில் லாக்கின் (Login) என்ற வாா்த்தையே பயன்படுத்தப்பட்டது. அன்று தொடங்கிய விஞ்ஞானத்தின் வளா்ச்சி படிப்படியாக விஸ்வரூபம் எடுத்து பல்வேறு நிகழ்வுகளை நொடிப்பொழுதில் அனுப்பவோ, பெறவோ முடிகிறது என்றால் அதுவே பெருமைக்குாிய விஷயமாகும். இணைய தள சேவை என்பது வாழ்க்கையின் ஒரு அங்கமாக பாா்க்கப்படுவதே சிறப்பான ஒன்றாகும்.
உள்ளங்கையில் உலகம் என்ற நிலைக்கு உயர்ந்து விட்டோம். கூகுள் மூலம் பேஸ்புக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டா, எக்ஸ் தளம், பணம் அனுப்புதல், பெறுதல் இணைய வழியில் தகவல் அனுப்புதல், பதில் பெறுதல், கல்வி உட்பட பல வகையான சேவைகளை உட்காா்ந்த இடத்திலேயே நிமிட நேரத்தில் செயல்படுத்த முடிகிறது.
அது பல வகையில் நன்மை என்றாலும், சிலரின் தவறான சட்ட விரோதமான செயல்களுக்கும் இந்த வழி செயல்படுத்தப்படுவதும் ஆபத்தானதாக உள்ளது! நாம்தான் பல வகைகளிலும் இதில் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். தேவை ஏற்படும் நிலையில் குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதை கவனத்தில் கொள்வது பெற்றோா்களின் கடமை. அதேநேரம், பல வழிகளில் இணையத்தோடு இணைவோம். அதேநேரம் ஆபத்தான செயல்களில் ஈடுபட்டு ஏமாறாமல் விழிப்போடு இருப்போம் என்ற பிரதிக்ஞையை இந்நாளில் கடைபிடிப்போம். இதயத்திற்கும் இணையத்திற்கும் நல்ல பாலமாக இருந்து நன்மை பல பெறுவோம்!