Dream
Dead people come in Dream.

இறந்தவர்கள் கனவில் வந்தால் நல்லதா? கெட்டதா?... வாங்க தெரிஞ்சுக்கலாம்!

Published on

மனிதர்களின் வாழ்வில் கனவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நிஜ வாழ்வில் நாம் புரிந்துகொள்ள முடியாத பல விஷயங்களை புரிய வைக்கும் கனவுகள் நம் ஆழ்ந்த எண்ணங்கள், உணர்ச்சிகள் மற்றும் அனுபவங்களை வெளிப்படுத்தும் ஒரு மிகச்சிறந்த வழியாகும். 

இறந்த நம் அன்புக்குரியவர்கள் கனவில் தோன்றுவது மிகவும் பொதுவானது. இவ்வாறு, இறந்தவர்கள் கனவில் வருவது நல்லதா? கெட்டதா? என்பது பற்றி பல விவாதங்கள் நடந்து வருகின்றன. இறந்தவர்கள் நம்மை காப்பாற்றவோ அல்லது எச்சரிக்கவோ கனவில் வருகிறார்கள் என்று சிலர் நம்புகிறார்கள். மற்றவர்கள், அது வெறும் நினைவுகளின் வெளிப்பாடு என்று சாதாரணமாக சொல்கின்றனர். 

இறந்தவர்கள் கனவில்  வருவதற்கான அர்த்தங்கள்: 

இறந்த நம் அன்புக்குரியவர்களை பற்றிய நினைவுகள் மற்றும் உணர்ச்சிகளை வெளிப்படுத்த கனவு ஒரு மீடியமாக செயல்படுகிறது. குறிப்பாக, இரவில் தூக்கமின்றி தவிக்கும் பலருக்கு இறந்தவர்கள் கனவில் வருவதாக சொல்லப்படுகிறது. இறந்தவர்களுடன் நமக்கு இருந்த உறவு அல்லது பிரச்சனை சார்ந்த விஷயங்கள் கனவுகளில் பிரதிபலிக்க அதிக வாய்ப்புள்ளது.  

இறந்தவர்கள் நம் கனவில் வந்தால் அது பொதுவாக நமது வாழ்க்கைக்கான வழிகாட்டுதல், ஆலோசனை மற்றும் ஆறுதல் சார்ந்த விஷயங்களுடன் தொடர்பு படுத்தப்படுகிறது. அதாவது, நாம் வாழ்க்கையில் நிலைகுலைந்து இருக்கும் தருணங்களில், அவர்கள் கனவில் தெரிந்தால், நமக்கு ஒரு ஆறுதல் கிடைத்து, வாழ்வில் முன்னேற்றப் பாதையை நோக்கி பயணிக்க உந்துதலாக இருக்கும். 

சில தருணங்களில் நமக்கு எச்சரிக்கை விடுக்கவும் இறந்தவர்கள் கனவில் வரலாம். அதாவது நீங்கள் தவறு ஏதேனும் செய்து விட்டீர்கள், அல்லது செய்யப் போகிறீர்கள் என்றால், அச்சமயத்தில் இறந்தவர்கள் கனவில் தோன்றினால், அது உங்களுக்கான எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும். மீண்டும் அந்தத் தவறை நீங்கள் செய்யக்கூடாது என்பதை உணர்த்தவே அவர்கள் கனவில் தோன்றும் வாய்ப்புள்ளது. 

இதையும் படியுங்கள்:
கனவு நனவாக, உண்மையான உலகில் வாழுங்கள்..!
Dream

ஒரு கனவின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள கனவில் நடந்த நிகழ்வுகள் மற்றும் உணர்ச்சிகளை நாம் கவனிக்க வேண்டும். இறந்தவர்கள் உங்களது கனவில் மகிழ்ச்சியாக, ஆரோக்கியமாக இருப்பது போல் நேர்மறையாக வந்தால், அது நீங்கள் அன்பு, ஆதரவுடன் மகிழ்ச்சியாக இருப்பதன் அறிகுறியாக இருக்கலாம். இதுவே சோகமாக, கோபமாக, பயமுறுத்துவது போன்று எதிர்மறையாகத் தோன்றினால், உங்களது பிரச்சனைகள் சார்ந்து பிரதிபலிக்கும் விஷயங்களாக நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். 

கனவுகள் என்பது நம் ஆழ்மனதின் மிகவும் சிக்கலான வெளிப்பாடுகள். எனவே, கனவில் இறந்தவர்கள் வருவதற்கு மிகச் சரியான காரணம் சொல்வது கடினம். இருப்பினும் உங்களது கனவின் அர்த்தத்தை முழுமையாக புரிந்து கொள்ள, அதில் நடந்த விபரங்கள், உணர்வுகள் மற்றும் அது உங்கள் வாழ்க்கையுடன் எவ்வாறு தொடர்புடையது என்பதை பற்றி சிந்திக்க வேண்டும். 

logo
Kalki Online
kalkionline.com