

அனைத்து உயிா்களிடமும் அன்பு பாசம் காட்டுதல், இயேசுவின் கொள்கையான ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு என்ற தத்துவத்தை கடைபிடித்ததோடல்லாமல் காந்திய வழியில் வன்முறையற்ற அறவழிப்போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டே, கொள்கை நெறியோடு வாழ்ந்தவர்.
அமொிக்க மத குருமாா்களில் தலை சிறந்த ஒருவர்தான் மாா்ட்டின் லூதர் கிங் ஜூனியர். அவரது பிறந்த நாளான ஜனவரி 15ம் நாள் அவரது நினைவலைகளோடு தொடர்வோம்.
(15/01/1929-04/04/1968) தந்தை மாா்ட்டின் லூதர் - தாயாா் அல்பெர்டா அட்லான்டாவில் பிறந்தவர். வாஷிங்டன் உயர் நிலைப்பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றாா். 1948ல் மோா்ஹவுசில் சமுகவியல் இளங்கலை பட்டம். அதைத் தொடர்ந்து 1951ல் பென்சில்வேனியாவில் சமயக்கல்வி பட்டம் பயின்றிருந்தாலும், பாஸ்டன் பல்கலையில் சமயக்கல்வியில் முனைவர் பட்டம் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
ஆரம்பகாலத்தில் மாா்ட்டின் லூதர் கிங் ஜூனியர், ஐக்கிய அமொிக்காவில் சமூக உாிமைக்காக போராடிய மாபெரும் ஆப்ரிக்க - அமொிக்க தலைவராவாகவே வாழ்ந்திருக்கிறாா்.
வன்முறையற்ற அறவழிப்போராட்டமே தன் கொள்கை என கடைபிடித்து வாழ்ந்து வந்த அமொிக்க குருமாா்களில் இவரும் ஒருவர். ஆப்ரிக்க, அமெரிக்க மனித உாிமைக் கழகத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ளாா்.
இளமைக்காலத்தில் சமூக உாிமை வாதியாகவே வாழ்ந்திருக்கிறாா். அதோடு கிறிஸ்துவத்தின் கொள்கையில் ஐயம் ஏற்பட பின்னர் விவிலியத்தில் ஆய்வு மேற்கொண்டு அதன் கருத்தை ஏற்றுக்கொண்டாா்.
1953 ல் திருமணம் முடித்தாா். இருபத்தி ஐந்தாம் வயதில் பாதிாியாராக பொறுப்பேற்றாா்.
1955ல் மாண்ட்கோமரியில் பேருந்து புறக்கணிப்பு போராட்டத்திற்கு தலைமை தாங்கி வழிநடத்தியதோடு தொடர்ச்சியாக தெற்காசிய தலைவர் மாநாடு நடத்த உதவி செய்தவகையில் அந்த மாநாட்டின் தலைவராக நியமிக்கப்பட்டாா்.
1957ல் ஜாா்ஜியாவில் நடைபெற்ற நிறப்போராட்டம் தோல்வியில் முடிந்தது.
அதேநேரம் 1962ல் அலபமாவில் நடந்த வன்முறையற்ற போராட்டம் அனைவரையும் கவர்ந்தது என்பதே வரலாறு.
1963ல் வேலை சுதந்திரம் வேண்டி வாஷிங்டனில் மிகப்பொிய பேரணியை நடத்தினாா்.
பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டதன் மூலம் அது ஒரு திருப்பு முனையாகவே அமைந்தது.
அமெரிக்க வரலாற்றில் இந்த பேரணி ஒரு திருப்பு முனையாகவே அமைந்தது என்பதும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.
அதே நேரம் அமைதிக்கான நோபல் பரிசும் மாா்ட்டின் லூதர் கிங் ஜூனியருக்கு வழங்கப்பட்டது.
அவர் தனது உரைகளில் எல்லாம் மனிதநேயத்தை வலியுறுத்தியே பேசினாா்.
அன்டை அயலாரையும் உன்னைப்போலவே நேசி, அனைவரிடமும் அன்பு காட்டு, பகைவனையும் நேசி, அவர்களுக்காக வேண்டுதல் செய், அவர்களையும் ஆசீா்வதி போன்ற அருமையான, அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் அவரது கொள்கைப்பிடிப்பானது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.
இப்படி வன்முறையில்லாமல் போராடும் தன்மையை இந்தியாவைப் பார்த்தே புாிந்து கொண்டேன் என இந்தியா வந்தபோது பேசியிருக்கிறாா்.
இப்படிப்பட்ட நல்ல உள்ளம் கொண்ட மனிதநேய பன்பாளர் 04/04/1968ல் டென்னசி மாநிலத்தில் மெம்ஃபிஸ் நகரில் சுட்டுக்கொல்லப்பட்டாா். அப்போது அவருக்கு அகவை முப்பத்தி ஒன்பது என்பது ஜீரணிக்க முடியாத ஒன்று.