

திருவள்ளுவர் ஆண்டானது வள்ளுவர் ஆண்டு என்றும் அழைக்கப்படுகிறது. இது தமிழ்நாட்டில் பயன்படுத்துவதற்காக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு தமிழ் நாள்காட்டி முறையாகும்.
முதலாவது திருவள்ளுவர் தினம் ஆனது, 1935 ஆம் ஆண்டு மே 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகள், தெ.பொ.மீனாட்சி சுந்தரம் மற்றும் திரு.வி.கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் கொண்டாடப்பட்டது.
1966-ம் ஆண்டு ஜூன் இரண்டாம் தேதி திருவள்ளுவர் தினமாக கொண்டாட அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால் 1971 ஆம் வருடம் திருவள்ளுவர் தினம் தை மாதத்திற்கு மாற்றப்பட்டது.
இது 1972-ம் ஆண்டு தான் நடைமுறைக்கு வந்தது.
1981 ஆம் வருடம் மதுரையில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் திருவள்ளுவர் ஆண்டு தமிழக அரசின் ஆவணங்களை பதிவு செய்ய அரசாணையை பிறப்பித்தார்.
திருவள்ளுவர் காலம் கி.மு 31அல்லது கி.பி இரண்டாம் நூற்றாண்டு எனினும் திருக்குறளில் உள்ள கருத்துக்கள் இன்றும் வாழ்க்கைக்கு பொருந்துபவை ஆகும்.
திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் மிகவும் சிறப்பு பெற்றது.
திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளின் சிறப்புகள்:
திருக்குறள் ஒரு உலக பொதுமறை அறிவியலின் அறம், பொருள், இன்பம் ஆகும். இது மூன்றையும் விளக்கும் நூல் 133 அதிகாரங்கள் மற்றும் 1330 குறட்பாக்களை கொண்டது. தமிழ் என்ற சொல் இடம் பெறாதது, சிறப்பான சொற்களை பயன்படுத்துவது, காலத்தால் அழியாத கருத்துக்கள், உலகப் பொதுமறை மற்றும் பல சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுவது போன்ற பல சிறப்பு அம்சங்களை கொண்டது திருக்குறள்.
திருக்குறளில் ஒவ்வொரு குறளும் இரண்டடிகளைக் கொண்ட ஏழு சீர்களைக் கொண்ட வெண்பா வடிவில் அமைந்துள்ளது.
இது சுருக்கமாகவும், ஆழமான பொருளுடன் இருக்கும்.
திருக்குறளில் மொத்தம் உள்ள சொற்கள் 14,000. தமிழில் மொத்தம் உள்ள 247 எழுத்துக்களில் 37 எழுத்துக்கள் திருக்குறளில் பயன்படுத்தப்படவில்லை.
திருக்குறள் நூலில் இரண்டு வகை மரங்கள் மட்டுமே காட்டப்பட்டுள்ளது அதை பனைமரம் மற்றும் மூங்கில் மரம்.
பழ வகைகளில் நெருஞ்சிப்பழம் மட்டுமே திருக்குறளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மலர் வகைகளில் அனிச்சம், குவளை ஆகிய இரு மலர்கள் குறித்து மட்டுமே திருக்குறளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
'குன்றிமணி' என்கிற விதை மட்டும்தான் திருக்குறளில் இடம் பெற்ற ஒரே விதை.
திருக்குறளில் எண் 9 மட்டும் எங்குமே பயன்படுத்தவில்லை. அதே சமயம் எண் 7, 8 குறள்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை 42,194 ஆகும்.
உலகின் 80 மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
திருக்குறள் முதன் முதலாக 1812 ஆம் ஆண்டு புத்தகமாக அச்சிடப்பட்டது.
1840 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் திருக்குறள் முதன்முதலாக அச்சிடப்பட்டது.
திருக்குறள் 'அ' கரத்தில் தொடங்கி 'ன' கரத்தில் முடிகிறது.
திருக்குறளில் 'பற்று' என்ற சொல், ஒரே குறளில் ஆறு முறை வருகிறது.
அனைத்து அதிகாரங்களும் 10 குறள்களை மட்டுமே கொண்டுள்ளது.
தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, ஹிந்தி, போஜ்புரி, வங்காளம், மணி குஜராத்தி, பஞ்சாபி சமஸ்கிருதம், சௌராஷ்டிரா, ஒரியா ஆகிய 14 மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் தினத்தில் அவரைப் போற்றுவோம்!
அவர் இயற்றிய திருக்குறளையும் படித்து இன்புறுவோம் !