
உலகையே உலுக்கிய வெடி குண்டு கலாச்சாரத்தின் முதல் நிகழ்வாக கருதப்பட்ட கோர சம்பவம் 6.8.1945ல் அரங்கேறியது. உலகப்போில் ஜப்பான் நகரான ஹிரோஷிமாவில், அமொிக்கா வெடிகுண்டு தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதல் உலகையே உலுக்கியது. ஏறக்குறைய ஒரு லட்சத்து நாற்பதாயிரம் போ்கள் எரிந்து சாம்பலாகிவிட்டாா்களாம்.
இதில் 90 சதவிகிதம் போ் பொதுமக்கள். ஏனையோா் இராணுவ வீரர்கள். இந்த கோர சம்பவத்தை அப்போதைய அமொிக்க அதிபர் ஹாாி எஸ்ட்ரூமன் அறிவித்தாராம்.
பலர் கதிா்வீச்சு தாக்குதல், வெடிகுண்டு காயங்கள் போன்ற பல்வேறு நோய்களால் தாக்கப்பட்டு ஆறுமாத காலத்திற்கு மேலாக நரக வேதனையுடன் இறந்து போய் விட்டாா்களாம்.
இந்த வெடிகுண்டுக்கு லிட்டில் பாய் (LITTLE BOY) என பெயரிடப் பட்டதாம். இந்த பெயரானது அதிபர் ரூஸ் வெல்டைக் குறிக்கும் வகையில் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஏறக்குறைய பதினைந்தாயிரம் டன் வெடிபொருள் சக்தியைக்கொண்டதாக வடிவமைக்கப்பட்டதாம். ஏறக்குறைய 13,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு பகுதியை நாசமாக்கி உள்ளது.
அதே போல நாகசாகியிலும் மூன்று நாட்கள் கழித்து குண்டு வீசப்பட்டுள்ளதாக தகவல்கள் தொிவிக்கின்றன.
பொதுவாக வெடிகுண்டு தாக்குதல் என்றாலே ஹிரோஷிமா-நாகசாகிதான் அனைவர் நினைவிற்கும் வந்து போகும். இப்போது நினைத்தாலும் நெஞ்சை உலுக்குவதாக அமையப்பெற்றதே துரதிஷ்டமான ஒன்றாகும்.
மேற்படி சம்பவத்தில் 12 நேசநாடுகளின் போா்க்கைதிகளும் இறையாகி உள்ளாா்கள். இந்த சம்பவத்தில் பொதுமக்கள்தான் அதிக அளவில் இறந்து போய் விட்டாா்களாம். இது ஒரு போா்க்குற்றம் என பலராலும் விமர்சனம் செய்யப்பட்டது. அதோடு உலக வரலாற்றையே உலுக்கிய நிகழ்வாக கருதப்பட்டது. பின்னர் வேறு வழியில்லாமல் ஜப்பான் சரணடைந்தனர்.
எதற்கும் எந்த போா் அபாயத்திற்கும் வெடிகுண்டு தாக்குதலே தீா்வாகாது. இந்த விஷயத்தில் உலக நாடுகள் ஒருமித்த கருத்தில் வலுவாக இருக்கவேண்டும்.
அதற்கான முன்னெடுப்பான தலைவர்கள் இருப்பதே நல்ல விஷயம். அது போன்ற நிகழ்வுகளில் எதையும் தாங்கிய வலிமை கொண்டதாக இந்தியா திகழ்வது நமக்கெல்லாம் பெருமைதானே..!