தினமும் பாடல்களை தவறாமல் கேட்பவள் தனம்.. அவளின் ரசனையே இயற்கை தான். தினமும் காலையில் எழுந்ததும் பாடல்கள் கேட்டுக் கொண்டே பணிக்கு செல்ல ஒப்பனை செய்வாள். அதுவே அவளது நாளை சுறுசுறுப்பாக்கும். ஆனால் மற்ற பணிகளிலும் தன்னை அதிக கவனத்துடன் ஈடுபடுத்திக் கொள்வாள். தன் நண்பர்களுடன் சென்றாலும் போட்டிக்கு போட்டி என பாடல்களை வைத்தே விளையாடுவாள்.
இவள் பாடல் மேல் கொள்ளும் ரசனைக்கு காரணம் என்ன என்று கேட்டால், இசையமைப்பாளர்களின் இசை, பாடல் வரி, ராகம், பல்லவி என அடுக்கிக் கொண்டு போவாள். இரவு நேரங்களில் பேருந்தில் சன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து இயற்கையோடு சேர்ந்து பாடல் கேட்பதுதான் சொர்க்கம் என்பாள்.
தினமும் ஒவ்வொரு வித பாடல் கேட்பாள். இப்படித்தான் அன்றொரு நாள் தன்னுடைய பணிகளை முடித்து விட்டு வீட்டுக்கு செல்ல தயாரானாள் தனம். அன்றோ அவளுக்கு பணிச் சுமை அதிகம்.. சற்று சோர்வாக அலுவலகத்தை விட்டு வெளியேறினாள்.
தினமும் வெவ்வேறு தலைப்புகளை தேர்ந்தெடுத்து பாடல் கேட்கும் அவள், அன்று தனக்கு இருந்த சோர்வில் எந்த தலைப்பை தேர்ந்தெடுக்கலாம் என்று யோசித்தவாறே நடந்தாள். அன்று முழு பௌர்ணமி. அழகான நிலவொளி வெளிச்சம். அவளுக்கு பிடித்தமான சூழ்நிலை அமைந்திருந்தாலும் அவளின் சிந்தனை முழுதும் இன்று எந்த தலைப்பை தேர்ந்தெடுப்பது என்பதில் தான் இருந்தது...
இரண்டு அடி எடுத்து வைக்க ஒரு டீ கடையில் ஒலித்தது ரேடியோ. அதில் 'ஹாய், ஹலோ! வெல்கம் இன்னைக்கு நாம முக்கியமான ஒரு நாள் பத்தித்தான் பார்க்க போறோம்... ஆமாங்க இன்னைக்கு ஜூன் 15 உலக காற்று தினம்.. நாம உயிர் வாழ முக்கிய பங்கு வகிப்பதே இந்த காற்று தாங்க... நம்மள வாழவைக்கிற இந்த காற்றை 'ஐரோப்பிய காற்று ஆற்றல் ஆணையமும்' , 'உலகளாவிய காற்று ஆற்றல் மன்றமும்' ஒழுங்குபடுத்திட்டு வாரங்க என்று இவள் காதில் ஒலிக்க அவ்வளவுதான் சோர்வெல்லாம் காணாம போச்சு தனத்துக்கு.. உடனே இரவின் அழகோடு, பௌர்ணமி வெளிச்சத்தில் சில்லென்ற காற்று வீச, காற்று சம்மந்தப்பட்ட பாடல்களுடன் தன் நடையை தொடர்ந்தாள்.....
1. காற்று வீசும் உன் வாசம்.....
2. இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே.....
3. காத்து காத்து வீசுது பொண்ணுக் காத்து வீசுது...
4. ஜூன் போனால் ஜூலை காற்றே...
5. மனசுல சூர காத்தே...
6. காற்றின் மொழியே...
7. என் சுவாச காற்றே....
8. கூத காத்து...
9. என் உயிர் காற்றே...
10. தென்றல் காற்றே...
'இன்று இசையோடு சேர்த்து காற்றை கொண்டாடுவோம்'. உங்கள் நினைவில் உடனே தோன்றும் காற்று பாடல் என்ன ? கீழே கமெண்டில் பதிவு செய்யுங்கள்..