ஜூலை 25 - தேசிய சமையல் கலைஞர்கள் தினம்!

healthy recipes
healthy recipesImage credit - pixabay
Published on

ஜூலை 25 தேசிய சமையல் கலைஞர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. பிள்ளைகளின் பசி அறிந்து அதனை போக்கும் அனைத்து அம்மாக்களுக்கும் வாழ்த்துக்கள். சமைத்து அன்புடன் பரிமாறும் மனைவியை நேசியுங்கள். பசி அறிந்து போக்கும் அம்மாக்களை போற்றுங்கள். 

இந்த சிறப்பு நாள் சமையலின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கொண்டாடப் படுகிறது. இதற்கு நீங்கள் ஒரு சமையல்காரராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் சமையல் திறனை கூர்மைப்படுத்தவும், உங்கள் உழைப்பின் பலனை அனுபவிக்கவும் தினம் தினம் விதவிதமாக சமைத்து அசத்தும் பெண்களுக்கு பிள்ளைகளும், கணவன் மார்களும் வாழ்த்து தெரிவித்தாலே போதும்.

புதுப்புது சுவைகள் கொண்ட ரெசிபிகள், நுட்பங்கள் மற்றும் புதுவிதமான யோசனைகளைக் கொண்டு விதவிதமாக சமைத்து அனைவரையும் வசீகரிக்கும் வீட்டுப் பெண்கள் மட்டுமல்ல சிறு சிற்றுண்டி சாலைகளை அமைத்து அனைவரின் பசியையும் ஆற்றும் அனைத்து உள்ளங்களையும் சிறப்பிக்கும் விதமாக இத்தினம் கொண்டாடப்படுகிறது.

நம் பாட்டிமார்களின் பாரம்பரிய சமையலும், நம் அம்மாக்களின் ஃபியூஷன் சமையலும் நம் சுவை மொட்டுக்களை ஈர்க்கத்தான் செய்கின்றது. சமையல் கலையில் நிறைய புதுமைகளைப் புகுத்தி நிறைய வித்தியாசமான ருசியில் சமைத்து பரிமாறி விருந்தோம்பல் செழிக்க செய்யும் அர்ப்பணிப்பை பாராட்டி கொண்டாடவே இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.

உணவகங்களில் பணிபுரியும் சமையல் கலைஞர்கள் டேபிள் ஆர்ட்ஸ் எனப்படும் மேஜை பழக்க வழக்கங்களில் சிறந்து விளங்குகின்றனர். சமையல் கலைஞர்களுக்கு ஊட்டச்சத்து, உணவு முறை மற்றும் உணவு அறிவியல் பற்றிய புரிதல் தேவைப்படுகிறது.

சமையல் கலைகளின் தோற்றம் சுமார் 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பழமையான மனிதர்களிடமிருந்து துவங்கியது. ஆதி மனிதர்கள் நெருப்பை மூட்டி இறைச்சியை சமைத்து உண்டதாக குறிப்புகள் உள்ளது. அரசர்கள், பிரபுக்கள் காலத்தில் தொழில்முறை சமையல்காரர்களின் பங்கு அதிகமாகியது. காலப்போக்கில் உணவுகள் மற்றும் சமையல் கலைகள் பற்றிய ஆழமான அறிவு அதிகமாகி இன்று சமையல் கலை மாணவர்கள் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு கலாச்சாரங்களின் வெவ்வேறு உணவு வகைகளை அறிமுகப்படுத்துகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com