எளிதாக செய்யலாம் இத்தாலிய ஸ்பெஷல் லசானியா!

ஜூலை 29 - தேசிய லசானியா தினம்!
Lasagna...
Lasagna...
Published on

லசானியா ஒரு பிரபலமான இத்தாலிய உணவாகும். இந்த சுவையான உணவின் நினைவாக  அமெரிக்காவில் ஜூலை 29 அன்று "தேசிய லசானியா தினம்" கொண்டாடப்படுகிறது. இதனை நாம் வீட்டிலேயே எளிதாக செய்யலாம். இவற்றை காய்கறிகள், சீஸ், சாஸ் மற்றும் இறைச்சி கொண்டு தயாரிக்கின்றனர். 

இத்தாலியின் நேபிள்ஸ் நகரில் முதன் முதலில் தோன்றியது. இடைக்காலத்தில் இது உலகம் முழுவதும் பல ரசிகர்களை பெற்று சைவம், அசைவம் என்று பல அவதாரங்களில் ருசிக்கப்படுகிறது. கூகுளில் அதிகம் தேடப்படும் உணவு வகைகளில் இதுவும் ஒன்றாகும். பல இந்திய மாநிலங்களில் பிரபலமான உணவாக உள்ளது.

லசானியா என்பது லத்தீன் வார்த்தையான "லசானம்" என்பதிலிருந்து பெறப்பட்டது. அதாவது சமையல் பானை என்று பொருள்.  சிலர் இது கிரேக்க பிளாட்பிரெட் லகானனில் இருந்து வந்ததாக நம்புகின்றனர். இது பரந்த தட்டையான பாஸ்தாவிலிருந்து தயாரிக்கப்படுகிறது. லசானியா செவ்வக வடிவிலான பாஸ்தா வகை உணவாகும். மாவு, முட்டை, இரண்டு சிட்டிகை உப்பு கொண்டு இதனை வீட்டிலேயே மிகவும் ஈஸியான வெஜ் லசானியாவை தயாரிக்கலாம்.

லசானியா ஒரு பிரபலமான இத்தாலிய உணவாகும். பாஸ்தா, கிரீமி சாஸ், உருகிய சீஸ் ஆகியவற்றின் சுவையான அடுக்குகளுக்கு பெயர் பெற்றது.  இத்தாலியில் லசானியா தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு பொருட்களால் தயாரிக்கப்படுகிறது.

வடக்கு இத்தாலியில் உள்ள எமிலியா ரோமக்னாவில் "லசானியா அல்ஃபோர்னோ" பிரபலமானது. இதில் கீரை பாஸ்தா, பெச்சமெல் சாஸ், அரைத்த பார்மிகியானோ- ரெஜியானோ சீஸ் ஆகியவற்றின் அடுக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. மற்றொரு பகுதியில் சிசிலியன் லசானியா என்ற பெயரில் "லசானியே அல்லா நார்மா" தயாரிக்கப்படுகிறது இதில் கத்திரிக்காய், ரிக்கோட்டா மற்றும் தக்காளி சாஸ் கொண்டு ருசியாக செய்யப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
உங்கள் மனசாட்சியை புறக்கணிக்காதீர்கள்!
Lasagna...

19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இத்தாலிய குடியேறியவர்கள் லசானியாவை அமெரிக்காவிற்கு கொண்டு வந்தனர். இது அமெரிக்காவில் பிரபலமடைந்து உள்ளூர் பொருட்களைக் கொண்டு சுவையாக தயாரிக்கப்பட்டன.

லசானியாவில் ரிக்கோட்டா சீஸ் மற்றும் மொஸரெல்லா ஆகியவை சேர்க்கப்பட்டு, சில இடங்களில் காய்கறிகள், கடல் உணவுகள் மற்றும் பல வகையான இறைச்சிகள் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

லசானியா என்பது பண்டைய கிரேக்கத்தில் அதன் வேர்களும், இத்தாலியில் அவை மேலும் வளர்ச்சி அடைந்து பல நூற்றாண்டுகளாக உருவான வரலாற்றை கொண்ட ஒரு உணவாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com