ஜூலை 7: உலகச் சாக்கலேட் நாள்! சாக்கலேட் எடு கொண்டாடு!

World Chocolate Day
World Chocolate Day

உலகம் முழுவதும் ஜூலை 7 ஆம் நாள் உலகச் சாக்கலேட் நாளாகக் ((World Chocolate Day) கடைப்பிடிக்கப்படுகிறது. 

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் சாக்கலேட் (Chocolate) எப்படித் தயாரிக்கப்படுகின்றன? என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

சாக்கலேட் என்பது கொக்கோ மரத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் பல்வேறு பொருட்களைக் குறிக்கும் மத்தியக் கால அமெரிக்கச் சொல்லாகும். பல்வேறு இனிப்புகள், அணிச்சல்கள், பனிக்கூழ்கள் மற்றும் குக்கிகளிலும் சாக்கலேட் ஒரு முக்கியமான இடுபொருளாக இருக்கிறது. உலகில் மிகவும் விரும்பப்படும் சுவை மணங்களில் சாக்கலேட்டும் ஒன்றாக இருக்கிறது.

மத்திய அமெரிக்காவில் தோன்றிய கொக்கோ மரத்தின் (Theobroma Cacao) கொட்டைகளை நுண்ணுயிர் பகுப்புக்குட்படுத்தி (Ferment), வறுத்து, அரைக்கும் போது கிடைக்கும் பொருட்கள் சாக்கொலேட் அல்லது கொக்கோ என்றழைக்கப்படுகின்றன. இவை ஒரு வீரிய சுவை மணமும் கசப்புத் தன்மையும் கொண்டவை. சாக்கலேட் என்று பொதுவாக அழைக்கப்படும் இனிப்புப் பண்டம், கொக்கோ கொட்டையின் திட மற்றும் கொழுப்புப் பாகங்களின் கலவையைச் சர்க்கரை, பால் மற்றும் பிற பல இடுபொருட்களைச் சேர்ப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
மில்க் சாக்லேட், ரெகுலர் சாக்லேட்டை விட 'டார்க் சாக்லேட்' நல்லதா?
World Chocolate Day

சாக்கலேட்டைப் பயன்படுத்தி கொக்கோ அல்லது பருகும் சாக்கலேட் என்று அழைக்கப்படும் பானங்களும் தயாரிக்கப்படுகின்றன. இவை மத்திய கால அமெரிக்கர்களாலும் அங்கு வந்த முதல் ஐரோப்பிய பயணிகளாலும் பருகப்பட்டன. சாக்கொலேட் பெரும்பாலும் அச்சுக்களில் வார்க்கப்பட்டு கனசெவ்வக வடிவங்களில் தயாரிக்கப்படுகிறது. விழாக்காலங்களில் விலங்குகள், மனிதர்கள் என பல வடிவங்களில் வார்த்து தயாரிக்கப்படுகின்றன. உதாரணமாக, ஈஸ்டர் பண்டிகையின் போது முட்டை அல்லது முயல் வடிவிலும், கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது புனித நிக்கோலஸ் வடிவிலும், காதலர் தினத்தின் போது இதய வடிவிலும் தயாரிக்கப்படுகின்றன.

சாக்கலேட் ஒரு மிகப் பிரபலமான இடு பொருளானதால் பல்வேறு வகைகளில் கிடைக்கிறது. தயாரிப்பின் போது உட்பொருட்களின் விகிதத்தை மாற்றுவதன் மூலம் பல நிலை மற்றும் சுவை மணம் கொண்ட சாக்கலேட்டுகள் கிடைக்கும். மேலும், அதிக வகை சுவை மணங்களை, கொட்டைகளை வறுக்கும் நேரம் மற்றும் வறுக்கப்படும் வெப்ப நிலைகளை மாற்றுவதால் உருவாக்க முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com