
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை உலக தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.
குழந்தைகள் தங்கள் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கும் தங்கள் தந்தையை உணர்ச்சி ரீதியாகவும் மன ரீதியாகவும் புரிந்துகொள்ளவும் குடும்பத்தில் தந்தையின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளவும், இந்த தந்தையர் தினம் வழிகாட்டுகிறது.
தந்தையர் தினம் என்பது தந்தையை கௌரவிப்பதற்காக ஒரு நாள் ஒதுக்கி அவர்களின் பங்களிப்பை பாராட்டுவதற்காக கொண்டாடப்படும் ஒருநாள் ஆகும். அது ஜூன் மாதத்தில் 3 வது ஞாயிறன்று கொண்டாடப்படுகிறது.
அதன் வரலாறும் - அதன் முக்கியத்துவமும்:
தந்தையர் தினம் 1910 இல் வாஷிங்டனின் ஸ்போகேனில் ஸ்மார்ட் டாட் தொடங்கிய இதயப்பூர்வமான முயற்சியுடன் தோன்றியதாக கூறப்படுகிறது.
1882 ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த சொனாரா லூயிஸ் ஸ்மார்ட் டோட் என்ற பெண் தனது தந்தையை பெருமைப்படுத்தும் விதமாக நடத்திய நிகழ்வே தந்தையர் தினமாக கொண்டாடப் படுவதாக வரலாறு கூறுகிறது.
வாஷிங்டனை சேர்ந்த இவர் 1909-ம் ஆண்டில் ஒரு நாள் தேவாலயத்தில் அன்னையர் தின போதனையைக் கேட்டுக் கொண்டிருந்தார். தாய் இல்லாததால் தந்தையின் பராமரிப்பில் வளர்ந்து வந்த அவருக்கு தந்தையர் தினத்தை பற்றிய யோசனை தோன்றியது. இணையதளத்தில் அன்னையர் தினத்திற்கு சமமான அதிகாரப்பூர்வ தந்தையர் தினத்தை கடைப்பிடித்து தந்தையர்களை கௌரப்படுத்துவதற்கான யோசனையை இவரே முதன் முதலில் முன்மொழிந்தார்.
1910 -ம் ஆண்டு இதற்கான ஒரு மசோதாவும் அறிமுகப்படுத்தப்பட்டது.
1966-ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் பி.ஜான்சன் என்பவர் ஜுன் மாதத்தின் மூன்றாவது ஞாயிறன்று தந்தையர் தினமாக கொண்டாடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
தந்தையர் தினம் 1972 -ல் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சனால் தேசிய விடுமுறையாகவும் அறிவிக்கப்பட்டது.
தந்தையர் தினம் மட்டுமின்றி எல்லா நாட்களிலும் தந்தை அந்தஸ்தில் இருப்பவர்களை மதித்து நடப்பது அவசியம்.
குறிப்பாக இந்த நாளில் தந்தைகளிடமும், தந்தை ஸ்தானத்திலிருந்து உங்களை வழி நடத்துபவர்களையும், பெருமை செய்வது மிகவும் அவசியம் .
அவர்களிடம் வாழ்த்துக்களை பெற்று உங்கள் நன்றி உணர்வை செலுத்தி அவர்களை மகிழ்விக்க வேண்டும்.
இந்தியாவில் மிக தீவிரமாக இந்த தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.