Happy Birthday Daddy: 80-வது பிறந்தநாளில் இளையராஜாவுக்கு யுவன்சங்கர் வாழ்த்து!

Happy Birthday Daddy: 80-வது பிறந்தநாளில் இளையராஜாவுக்கு யுவன்சங்கர் வாழ்த்து!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

இன்று 80-வது பிறந்த நாள் கொண்டாடும் இசைஞானி இளையராஜாவுக்கு அவர் மகன் யுவன் சங்கர் ராஜா தன் டிவிட்டரில் தன் தந்தையின் இளைய வயது புகைப்படத்தை வெளியிட்டு 'ஹேப்பி பர்த் டே டாடி' என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இளையராஜா பண்ணைப்புரத்தில் 1943-ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி பண்ணை புரத்தில் பிறந்தவர் இருப்பினும் அதே நாளில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளும் வருவதால், இளையராஜால் தனது பிறந்தநாளை ஜூன் 2-ம் தேதி கொண்டாடி வருகிறார்.

அந்த வகையில் இன்று 80வது வயதில் அடியெடுத்து வைத்துள்ள இளையராஜாவுக்குப் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தன் சதாபிஷேக விழாவை நேற்று முன்தினம் ( மே 31) திருக்கடையூரில் கொண்டாடினார். இந்த வைபவத்தில் இளையராஜாவின் குடும்பம் மற்றும் அவரது தம்பி கங்கை அமரன் குடும்பம் ஆகியோர் பங்கேற்றனர். 

இந்நிலையில் இன்று யுவன் சங்கர் ராஜா தன் டிவிட்டர் பக்கத்தில் இளையராஜா இளமையில் கோட்-சூட் அணிந்த புகைப்படத்தை ஷேர் செய்து 'Happy Birthday Daddy' என வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாகியுள்ளது.

இசைஞானி இளையராஜா இதுவரை 7000-க்கும் அதிகமான பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். பல்வேறு மொழிகளில் பாடியுள்ளார். 5 முறை தேசிய விருது வென்றுள்ளார். மேலும்  2010-ம் ஆண்டு பத்மபூஷன் விருதும் 2018-ல் பத்ம விபூஷன் விருதும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com