கலைப்புலி தாணு அலுவலகம்; வருமான வரித்துறையினர் சோதனை!

கலைப்புலி தாணு அலுவலகம்; வருமான வரித்துறையினர் சோதனை!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

சென்னை தி.நகா் பிரகாசம் சாலையில் இருக்கும் பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவின் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே பிரபல சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தயாரிப்பாளர், விநியோகஸ்தர், ஃபைனான்சியர் மற்றும் திரையரங்கு உரியமையாளர் என பல தொழில்களில் ஈடுபட்டிருப்பவர் ஜி.என்.அன்புச்செழியன்.

இவரது கோபுரம் சினிமாஸ் தயாரிப்பு நிறுவனம்தான் அண்மையில் வெளியான 'தி லெஜன்ட்' படத்தை விநியோகம் செய்ததாகத் தெரிவிக்கப் பட்டது. இந்நிலையில் சென்னையிலும் மதுரையிலும் அவருக்குச் சொந்தமான  40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சென்னை தியாகராயநகர் பிரகாசம் சாலையில் இருக்கும் பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவின் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com