15 ஊர்களில் வெயில் சதம்: மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்!

15 ஊர்களில் வெயில் சதம்: மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

தமிழகத்தில் 15 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் நேற்று வெய்யில் பதிவானது. வேலூரில் அதிகபட்சமாக 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுவரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. நேற்று மாலை 5.30 மணி வரை பதிவான வெப்பநிலையின்படி வேலூரில் அதிகபட்சமாக 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

மேலும் திருத்தணியில் 105 டிகிரி, தஞ்சாவூர், மதுரையில் 104 டிகிரி, கரூர் பரமத்தி, திருச்சி ஆகிய இடங்களில் தலா 103 டிகிரி, சென்னை விமான நிலையம், ஈரோடு ஆகிய இடங்களில் தலா 102 டிகிரி, அதிராம்பட்டினம், சென்னை நுங்கம்பாக்கம், பாளையங்கோட்டை, கடலூர், நாமக்கல், சேலம் ஆகிய இடங்களில் தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. 

–இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com