மருத்துமனையில் மிதுன் சக்கரவர்த்தி: வைரல் புகைப்படம்!

மருத்துமனையில் மிதுன் சக்கரவர்த்தி: வைரல் புகைப்படம்!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

பிரபல பாலிவுட்  நடிகர் மிதுன் சக்கரவர்த்தி உடல்நலக் குறைவுடன் மருத்துவமனையில் படுத்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தி. இந்தி, பெங்காலி, போஜ்புரி உட்பட பல்வேறு மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழிலும் ஆதி, ''யாகாவாராயினும் நாகாக்க' ஆகிய படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்திலும் மிதுன் சக்கரவர்த்தி நடித்திருந்தார். இந்நிலையில் உடல்நலக் குறைவுடன் மிதுன் சக்கரவர்த்தி படுத்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. 

இந்நிலையில் மிதுன் சக்கரவர்த்தியின் மகன் மகாக்ஷய் சக்கரவர்த்தி கூறியதாவது;

கடந்த சில நாட்களுக்கு முன் என் தந்தைக்கு காய்ச்சல், வயிற்று வலி மற்றும் சிறுநீரக கல் பிரச்சினை ஏற்பட்டது. அதனால் உடனடியாக அவரை பெங்களூருவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம்தான் அது. மற்றபடி என் தந்தை இப்போது குணமடைந்துவிட்டார். பயப்படுவதற்கு ஒன்றுமில்லை.

-இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com