கலைஞர் எழுதுகோல் விருது: ஐ.சண்முகநாதனுக்கு அறிவிப்பு!

கலைஞர் எழுதுகோல் விருது: ஐ.சண்முகநாதனுக்கு அறிவிப்பு!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

கலைஞர் கருணாநிதியின் பிறந்ததினத்தை முன்னிட்டு இன்று மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதனுக்கு கலைஞர் எழுதுகோல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

-இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு சட்டப்பேரவையில் செய்தி மக்கள் தொடர்புத் துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின்போது, கலைஞர் பிறந்த நாளான ஜுன் 3-ம் தேதியன்று ஆண்டுதோறும் ஒரு சிறந்த இதழியலாளருக்கு 'கலைஞர் எழுதுகோல் விருது' மற்றும் ஐந்து லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில் 2021-ஆம் ஆண்டிற்கான 'கலைஞர் எழுதுகோல் விருதுக்கு மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் அறிவிக்கப் பட்டுள்ளார்.  இன்று நடைபெறும் கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் விழாவில், கலைஞர் எழுதுகோல் விருது ஐ.சண்முகநாதனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

-இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com