பார்வையற்றோர் கண்டறிய புதிய நாணயங்கள்; பிரதமர் மோடி வெளியீடு!

பார்வையற்றோர் கண்டறிய புதிய நாணயங்கள்; பிரதமர் மோடி வெளியீடு!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

கண் பார்வையற்றவர்கள் கண்டறியும் வகையில் புதிய நாணயங்களை பிரதமர் மோடி இன்று வெளியிட்டார். இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டு விழா முத்திரையுடன் இந்த நாணயங்கள் வெளியிடப் பட்டது.

மத்திய அரசின் நிதியமைச்சகம் சார்பில்  'ஐகானிக் வாரம்' என்ற கொண்டாட்டம் டெல்லி விக்யான் பவனில் நடைபெற்றது. ,இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பல திட்டங்களை தொடங்கி வைத்தார். அதில் பார்வையற்றோர் எளிதில் அடையாளம் காணும் வகையில் புதிய நாணயங்களின் தொகுப்பை பிரதமர் வெளியிட்டார்.

-இதுகுறித்து பிரதமர் மோடி பேசியதாவது:

இந்திய விடுதலையின் 75 ஆவது ஆண்டு விழா முத்திரையுடன் புதிய ஒன்று, இரண்டு, ஐந்து, பத்து மற்றும் இருபது ரூபாய் நாணயங்கள் இன்று வெளியிடப் படுகிறது. கடந்த 8 ஆண்டுகளில், பிஜேபி ஆட்சியில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்துள்ளது.

மேலும் "ஸ்வச் பாரத் அபியான்" திட்டம் ஏழைகள் கண்ணியமான வாழ்க்கை வாழ வாய்ப்பளித்துள்ளது. ஆனால் முந்தைய ஆட்சியால் நாடு மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது மத்திய அரசின் திட்டங்கள் யாவும் பொதுமக்களை சென்றடைவதையே முன்னுரிமையாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

-இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்.

logo
Kalki Online
kalkionline.com