இரட்டை இலை சின்ன வழக்கு: ரூ.25 ஆயிரம் அபராதம்!

இரட்டை இலை சின்ன வழக்கு: ரூ.25 ஆயிரம் அபராதம்!
Published on

அதிமுக பொதுக்குழு ஜூலை 11-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அக்கட்சிக்குள் நிலவும் உட்கட்சி பூசல் காரணமாக இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி முன்னாள் அதிமுக உறுப்பினர் ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். 

-அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது:

அதிமுக-வில்  ஓபிஎஸ்  மற்றும் ஈபிஎஸ் ஆகியோருக்கு இடையிலான உட்கட்சி மோதல் முடிவுக்கு வரும் வரை இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைக்கக் கோரி, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஜூன் 28-ம் தேதி மனு தாக்கல் செய்தேன். அதற்கு இதுவரை எந்த பதிலும் கிடைக்கப் பெறவில்லை. எனவே இந்திய தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட மனு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-இவ்வாறு அதில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதுதொடர்பாக நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:

அதிமுக-வின் இரட்டை இலைச் சின்னத்தை முடக்கக் கோரி, விளம்பர நோக்கத்துடன் மனுதாரர் வழக்கு தொடர்ந்துள்ளார். எனவே இந்த வழக்கைத் தொடர்ந்த முன்னாள் அதிமுக உறுப்பினர் ஜோசப்புக்கு  ரூ.25,000 அபராதம் விதிக்கப் படுகிறது.

-இவ்வாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com