பொன்னையன் ஆடியோ சர்ச்சை:அதிமுக-வில் சலசலப்பு!

பொன்னையன் ஆடியோ சர்ச்சை:அதிமுக-வில் சலசலப்பு!
Published on

அதிமுக-வின் அமைப்புச் செயலாளர் பொன்னையன் பேசியதாக கூறப்படும் ஆடியோ இணையத்தில் வெளியாகி, அக்கட்சிக்குள் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அது பொய்யாக உருவாக்கிய ஆடியோ பேச்சு என்று பொன்னையன் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால் தன்னிடம் பொன்னையன் பேசிய அந்த ஆடியோ உண்மையானது என்று அதிமுக நிர்வாகி நாஞ்சில் கோலப்பன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் அக்கட்சிக்குள் சூடுபிடித்துள்ளது.

கன்னியாகுமரியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி நாஞ்சில் கோலப்பனுடன் பொன்னையன் பேசியதாக கூறப்படும் இந்த ஆடியோவில் அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்ற எடப்பாடி பழனிச்சாமி பணம் கொடுத்ததாக பேசி பதிவாகியுள்ளது. மேலும் அந்த ஆடியோவில் இருந்ததாவது;

எடப்பாடி பழனிசாமிக்கு மொத்தம் 9 எம்எல்ஏ-க்களின் ஆதரவு மட்டுமே உள்ளது, மேலும் கட்சியானது எடப்பாடியின் கட்டுப்பாட்டில் இல்லை. வேலுமணி, தங்கமணி போன்றார்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கட்சியை வைத்திருக்கிறார்கள். யாரும் இபிஎஸ்-சுக்கு விசுவாசமாக இல்லை. சிவி சண்முகத்திடம் 19 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். கொங்கு மண்டலத்தில் கூட எடப்பாடி ஆதரவு எம்எல்ஏக்கள் இல்லை.

இவ்வாறு பொன்னையன் பேசியதாக அந்த ஆடியோவில் பதிவாகியிருந்தது. இந்நிலையில் அந்த ஆடியோ போலியாக உருவாக்கப் பட்டது என்று பொன்னையன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது;

நான் பேசியதாக வெளியான அந்த ஆடியோ பொய்யானது. மிமிக்கிரி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பொய்யாக ஆடியோ வெளியிட்டு இருக்கிறார்கள். என் மீது அவதூறு ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது.

-இவ்வாறு பொன்னையன் தெரிவித்துள்ளார்.  ஆனால் அந்த ஆடியோ முழுக்க உண்மையானது என்று நாஞ்சில் கோலப்பன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது;

பொன்னையன் ஜூலை 9-ம் தேதி இரவு 9.59 மணிக்கு என்னுடன் பேசியதற்கான ஆதாரங்கள் உள்ளன. நேரம் வரும்போது தேவைப்பட்டால் அந்த ஆதாரங்கள்ளை வெளியிடுவேன்.

-இவ்வாறு அதிமுக நிர்வாகி கோலப்பன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் எடப்பாடி தரப்பு அதிமுக-வில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com