தலைவா..தலைமையேற்க வா; போஸ்டரால் பரபரப்பு!

தலைவா..தலைமையேற்க வா; போஸ்டரால் பரபரப்பு!

அதிமுக-வில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று அக்கட்சித் தொண்டர்கள் கோரி வரும் நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுக-வில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்பு அக்கட்சி ஓபிஎஸ்இபிஎஸ் என்ற இரட்டை தலைமையுடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அக்கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் வருகிற 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஆலோசனைக் கூட்டம் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது அதிமுகவிற்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என தொண்டர்கள் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் அக்கட்சி நகர செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் 'தலைவா வா தலைமையேற்க வா' 'ஒற்றைத் தலைமை ஒன்றே தீர்வு' '1.5 கோடி தொண்டர்களின் ஒரே விருப்பம் எடப்பாடியார், சப்போர்ட் இபிஎஸ்' உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com