சாம்பியன் பட்டம் வென்ற சிந்துவுக்கு பிரதமர் வாழ்த்து!

சாம்பியன் பட்டம் வென்ற சிந்துவுக்கு பிரதமர் வாழ்த்து!
Updated on

சிங்கப்பூரில் நடந்த  சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சிந்துவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரில் நேற்று நடந்த இறுதி போட்டியில், சீன வீராங்கனை வாங் ஷியை வீழ்த்தி இந்தியாவின் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார். இந்நிலையில் சர்வதேச அளவிலான WTA 500 தொடர்களில் பி.வி.சிந்து முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இந்நிலையில் பி.வி.சிந்துவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்

இதுகுறித்து பிரதமர் மோடி தன் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது;

பி.வி.சிந்து தனது முதல் சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரில் பட்டத்தை வென்றுள்ளார். இதற்காக எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மீண்டும் அவர் தனது விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தி வெற்றியை பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். அவரது வெற்றி, மற்ற விளையாட்டு, வீரர்களுக்கு ஊக்கத்தை அளிக்கும்.

-இவ்வாறு பிரதமர் மோடி தன் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com