பீகார் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 17 பேர் உயிரிழந்தனர். மாநிலம் முழுவதும் கனமழை பெய்துவரும் நிலையில், மின்னல் தாக்கியதில் பல மாவட்டங்களில் மக்கள் சிலர் உயிரிழந்தனர்.
பீகாரில் பகல்பூர் மாவட்டத்தில் 6 பேர், வைஷாலி மாவட்டத்தில் 3 பேர், பாங்கா, ககாரியா மாவட்டங்களில் தலா 2 பேர், முங்கர், மாதேபுரா மற்றும் கதிஹார் மாவட்டங்களில் ஒருவர் என ஒரே நாளில் 17 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார், தலா 4 லட்ச ரூபாய் நிவாரணமும் அறிவித்துள்ளார்.
–இதுகுறித்து முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்ததாவது;
பீகாரில் மோசமான காலநிலையில் மக்கள் முழு விழிப்புடன் இருக்க வேண்டும். இடியுடன் கூடிய மழையைத் தடுக்க அவ்வப்போது பேரிடர் மேலாண்மை குழு வழங்கும் ஆலோசனைகளைப் பின்பற்றவும் மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். மோசமான வானிலையில் வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்.
– இவ்வாறு முதல்வர் நிதிஷ் குமார் கூறியுள்ளார்.