அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக இ.பி.எஸ் மற்றும் ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது.
கடந்த 11-ம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் இ.பி.எஸ் தலைமையில் நடைபெற்றது. அதில் இ.பி.எஸ் கட்சியின் இடைக்கால பொதுச்செயலராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். அதேநாளில் ஒ.பி.எஸ் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் சிலர் சென்னை, ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சென்று அங்கிருந்த ஆவணங்களை அள்ளிச் சென்றனர்.
இந்நிலையில் இ.பி.எஸ் மற்றும் ஒ.பி.ஏஸ் ஆதரவாளர்களிடையே கலவரம் மூண்டது. இந்நிலையில் கலவரத்தையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில் அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி, இ.பி.எஸ் மற்றும் ஒ.பி.எஸ் தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ் குமார் இன்று தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டதாவது;
அதிமுக தலைமை அலுவலகத்தின் சீலை அகற்றி அதன் சாவியை இ.பி.எஸ்-சிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் இதுதொடர்பாக மேலும் பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில், அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் இன்னும் 1 மாத காலத்துக்கு தொண்டர்கள் யாரையும் அனுமதிக்கக் கூடாது.
-இவ்வாறு நீதிபதி சதீஷ் குமார் உத்தரவிட்டார்.
இதையடுத்து உற்சாகமான அதிமுக தொண்டர்கள், சென்னை பசுமை வழிச் சாலையிலுள்ள இ.பி.எஸ்-யின் இல்லத்துக்குச் சென்று வாழ்த்து தெரிவித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.