வீட்டுக் காவலில் ஆஸ்கார் இயக்குனர்!

வீட்டுக் காவலில் ஆஸ்கார் இயக்குனர்!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், இரண்டு ஆஸ்கார் விருதுகள் பெற்ற இயக்குனர் பால் ஹக்கீஸ் கைது செய்யப் பட்டுள்ளார்.

கனடா நாட்டை சேர்ந்த பால் ஹக்கீஸ் கடந்த 2006-ம் ஆண்டு கிராஷ் என்ற படத்தின் சிறந்த திரைக்கதை, மற்றும் தயாரிப்புக்காக ஒரே சமயத்தில் 2 ஆஸ்கார் விருதுகளைப் பெற்றார்.  

பால் ஹக்கீஸ் இப்போது இத்தாலியில் நடந்த திரைப்பட விழாவிற்கு சென்ற போது, இளம்பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். இதையடுத்து இத்தாலியில் பால் ஹக்கீஸ் தங்கியிருந்த ஹோட்டல் அறையில்  அவரை போலீஸார் வீட்டுக்காவலில் வைத்துள்ளனர்

இதுகுறித்து இத்தாலி போலீசார் தரப்பில் வெளியான தகவல்;

ஆஸ்கார் விருது பெற்ற இயக்குனரான பால் ஹக்கீஸ் இளம் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரையடுத்து, தற்சமயம் அவர் ஓட்டல் அறியில் ஹவுஸ்-அரெஸ்ட்டில் வைக்கப் பட்டுள்ளார். அவர் மீதான புகார் குறித்த விசாரணை நாளை மறுநாள் (ஜூன் 23) நடைபெற உள்ளது. அந்த விசாரணைக்கு பிறகே முடிவு எடுக்கப்படும்''

இவ்வாறு இத்தாலி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற புகாரில் பால் ஹக்கீஸ் சிக்குவது இது முதல் முறையல்ல! ஏற்கனவே 2018-ம் ஆண்டில் 4 பெண்கள் அவர் மீது வழக்கு தொடர்ந்தனர். ஆனால், அவை பொய்வழக்கு என்றும், அந்த பெண்கள் தன்னை மிரட்டி 9 மில்லியன் டாலர் பறிக்க முயன்றதாகவும் பால் ஹக்கீஸ் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com