TNPSC குரூப் 1 தேர்வு; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

TNPSC குரூப் 1 தேர்வு; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 1 தேர்வுக்கு இன்று முதல் ஆகஸ்ட் 22-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.

இதுகுறித்து TNPSC வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் குறிப்பிட்டதாவது;

தமிழகத்தின் அரசுத்துறையில்  பல்வேறு பதவிகளான துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர்,வணிக வரித்துறை உதவி ஆணையர்,கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர், ஊரக வளர்ச்சித்துறை துணை இயக்குநர்,மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய 6 பதவிகளுக்கு குரூப் 1 தேர்வு முதல் பணிநியமனம் செய்யப்படுகிறது.

அந்த வகையில் இப்பதவிகளுக்கு காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வுக்கு இன்று முதல் ஆகஸ்ட் 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அந்த வகையில் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://tnpsc.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம்

மேலும் ஆகஸ்ட் 27 முதல் 29-ம் தேதி வரை விண்ணங்களின் திருத்தம் மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 30- ம் தேதி குரூப் 1 முதல் நிலைத் தேர்வு நடைபெறும். அதற்கடுத்து  முதன்மை தேர்வு எப்போது நடைபெறும் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

-இவ்வாறு டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com