ஆளில்லா விமானம் தயாரிப்பு; மேக் இன் இந்தியா திட்டத்தில் நடிகர் அஜீத் குழு தேர்வு!

ஆளில்லா விமானம் தயாரிப்பு; மேக் இன் இந்தியா திட்டத்தில் நடிகர் அஜீத் குழு தேர்வு!

தமிழ் திரையுலகில் நடிகர் அஜீத் துப்பாக்கி சுடுதல், பைக் மற்றும் கார் ரேஸ் போன்றவற்றில் வெற்றி பெற்று சாதனைகள் படித்துள்ளார். இந்நிலையில் ஆளில்லா விமானத்தை தயாரிப்பதிலும் வல்லவரான அஜீத், சென்னை எம்.ஐ.டி கல்லூரி மாணவர்களுக்கு வழிகாட்டியாக செயல்பட்டார்.

அஜீத் தலைமையிலான இந்த மாணவர் குழு 'தஷா' என்ற பெயரில் செயல்படுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு ஆஸ்திரேலிய மெடிக்கல் எக்ஸ்பிரஸ் சேலஞ்ச் போட்டியில் அஜித்தின் தக்ஷா குழு 2-ம் இடத்தை பெற்றது. மேலும் கொரோனா காலத்தில் கிருமி நாசினிகள் தெளிக்க, இக்குழு உருவாக்கிய  ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன.

இந்நிலையில் தற்போது மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய பயணிகள் விமான போக்குவரத்துத் துறையின் சார்பில் ஆளில்லா விமானங்களை தயாரிக்க இந்த தக்ஷா குழு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து  மத்திய அரசு சார்பில் வெளியான தகவல்:

இந்தியாவில் மேக் இன் இந்தியா திட்டத்தின்கீழ் ஆளில்லா விமானங்களை தயாரிப்பதற்கு இந்தியா முழுவதிலும் இருந்து பல நிறுவனங்கள் தேர்வாகி இருக்கிறது. அதில் அஜித்தின் தக்ஷா குழுவும் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

-இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த தகவலை தற்போது அஜித் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர். தற்போது அஜித் ஹைதராபாத்தில் வினோத் இயக்கும் தன்னுடைய அடுத்த பட ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com