அதிமுக தலைமை அலுவலகம் வந்த ஆயுதப் படை!

அதிமுக தலைமை அலுவலகம் வந்த ஆயுதப் படை!

Published on

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு இன்று காலையில் ஆயுதப்படை வீரர்கள் 70 பேர் வந்திறங்கி, உடனடியாகத் திரும்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில், அக்கட்சியில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகாரமாக வெடித்துள்ளது. இதையடுத்து அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் வானகரம் திருமண மண்டபத்திற்கு போலீஸ் பாதுகாப்பு கோரி முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், இன்று காலையில் அதிமுக தலைமை ஆயுதப் படை பிரிவைச் சேர்ந்த 70 வீரர்கள் வந்திறங்கினர். ஆனால், சில நிமிடங்களில் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதுகுறித்து அந்த வீரர்கள் தெரிவித்ததாவது:

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பாதுகாப்பு வேண்டி இதுவரை விண்ணப்பம் ஏதும் கொடுக்கப்படவில்லை. வேறு இடத்துக்கு செல்ல வேண்டிய நாங்கள் இங்கு தவறுதலாக வந்துவிட்டோம்.

-இவ்வாறு அந்த ஆயுதப் படை வீரர்கள் தெரிவித்தனர். ஆனால் அதிமுக அலுவலகத்தில் ஏதாவது பிரச்சினைகள் நேரிட்டால், அதை சமாளிப்பதற்க்காக இந்த ஆயுதப் படை வீரர்கள் வரவழைக்கப்பட்டு, வேறொரு இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தயார் நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

logo
Kalki Online
kalkionline.com