குவாட் உச்சிமாநாடு: ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமருக்கு வரவேற்பு!

குவாட் உச்சிமாநாடு: ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமருக்கு வரவேற்பு!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக பதவியேற்ற ஆன்டனி ஆல்பனேசி இன்று ஜப்பானில் நடைபெறும் குவாட் மாநாட்டில் பங்கேற்க வந்தபோது, அவருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக ஆன்டனி அல்பனேசி நேற்று பொறுப்பேற்றார். இந்நிலையில் இன்று ஜப்பானில் நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக டோக்கியோ சென்றார். அவருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் மோடி உட்பட குவாட் நாடுகளின் தலைவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதிலும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய அதிபரிடம் ''இங்கே நீங்கள் ரிலாக்சாக உறங்கிவிட்டாலும் கூட பரவாயில்லை'' என்று சொல்லி, அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தினார்.

logo
Kalki Online
kalkionline.com