ஷூட்டிங்கில் விபத்து: ஆற்றில் விழுந்த காரில் சமந்தா!

ஷூட்டிங்கில் விபத்து: ஆற்றில் விழுந்த காரில் சமந்தா!

Published on

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை  சமந்தா நடிக்கும் 'குஷி' தெலுங்குப் படத்தின் ஆக்ஷன் காட்சி ஒன்றை காஷ்மீரில் நேற்று முந்தினம் படமாக்கினர். அப்போது அவர்கள் சென்ற கார் எதிர்பாராத விதமாக ஆற்றில் விழுந்துவிட, சமந்தாவும் விஜய் தேவரகொண்டாவும் காயத்துடன் மீட்கப் பட்டார்கள்.  இந்நிலையில் நேற்று இந்த படக்குழு ஐதராபாத் திரும்பியது.

இதுகுறித்து குஷி படக்குழுவை சேர்ந்தவர்கள் கூறியதாவது,

ஷூட்டிங்கின்போது எதிரபாராத விதமாக இந்த கார் விபத்து நடந்தது. விஜய் தேவரகொண்டாவும் சமந்தாவும் சென்ற கார் ஆற்றில் விழுந்ததாதால், அவர்கள் இருவரும் காயத்துடன் மீட்கபபட்டனர். இருவருக்கும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப் பட்டது.

இந்த விபத்தில் இருவருக்கும் முதுகு பகுதி வலி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.. அதனால் இருவருக்கும் பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. அவர்கள் அருகில் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை

-இவ்வாறு அந்தப் படக்குழுவினர் தெரிவித்தனர். 

'குஷி' படம் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வருகிற டிசம்பர் மாதம் ரிலீஸாக இருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com