அ.தி.மு.கவில் ஒற்றைத் தலைமை குறித்த விவகாரம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில் நேற்று அக்கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் சென்னை வானகரத்திலுள்ள திருமண மண்டபத்தில் நடந்தது.
அதிமுக-வில் ஒற்றைத் தலைமை கருத்துக்கு தீவிர எதிர்ப்பு தெரிவித்த ஓ. பன்னீர் செல்வம், முன்னதாக அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில் அ.தி.மு.க பொதுக் குழுவில் புதிய தீர்மானம் நிறைவேற்றக் கூடாது என்று சென்னை உயர்ந்தீமன்றம் உத்தரவு பிறத்தது.
இந்நிலையில்,அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நேற்று நடைபெற்றது. அதில் ஜூலை 11-ம் தேதி மீண்டும் பொதுக்குழு நடைபெறும் என்றும் அப்போது ஒற்றைத் தலைமை தேர்ந்தெடுக்கப்படுவார் என்று முடிவு எடுக்கப்பட்டது.அதனையடுத்து, அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்திலிருந்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் பாதியில் வெளிநடப்பு செய்தனர்.
இந்தநிலையில், ஓ.பன்னீர் செல்வம் இன்று டெல்லி சென்றுள்ளார்.அங்கு தலைமைத் தேர்தல் ஆணையரை ஓபிஎஸ் சந்திக்கவுள்ளதாகவும், அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் நடந்த சம்பவங்கள் குறித்து புகாரளிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.