காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டு கொலை; தீவிரவாதிகள் கைவரிசை!

காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டு கொலை; தீவிரவாதிகள் கைவரிசை!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

காஷ்மீரில் டிக்டாக் மூலம் பிரபலமான அம்ரீன் பட் (35). என்ற பெண்மணி நேற்றிரவு தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தைச் சேர்ந்த அம்ரீன் பட், கடந்த இரண்டு வருடங்களாக டிக் டாக் மூலம் பிரபலமானார். டிக்டாக்கில் பல வீடியோக்களை பதிவு செய்து வந்தார். இந்நிலையில், நேற்று மாலை தோட்டத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு தீவிரவாதிகள், அவரை துப்பாக்கியால் சுட்டனர்.

அம்ரீனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது சகோதரர் மகனையும் சுட்டுவிட்டு, தீவிரவாதிகல் தப்பியோடினர். இதில் சம்பவ இடத்திலேயே அம்ரீன் பட் உயிரிழந்தார். படுகாயமடைந்த அவரது சகோதரர் மகன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்

இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் ஸ்ரீநகரில் சைஃபுல்லா காத்ரி என்ற காவலரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

logo
Kalki Online
kalkionline.com