TNPSC –யில் தமிழ் தகுதித் தேர்வில் மாற்றுத் திறனாளிளுக்கு விலக்கு: அரசு அறிவிப்பு!

TNPSC –யில் தமிழ் தகுதித் தேர்வில் மாற்றுத் திறனாளிளுக்கு விலக்கு: அரசு அறிவிப்பு!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளில் பங்குபெறும் மாற்றுத் திறனாளிகள் தமிழ் மொழி தகுதித் தேர்வை எழுத வேண்டியது கட்டாயமில்லை என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

-இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசுக் குறிப்பில் தெரிவித்ததாவது:

தமிழக அரசுத்துறைகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த அரசு பணிகளில் சேர்வோருக்கு தமிழ் மொழி பற்றிய அறிவு அவசியம் என்பதால், சமீபத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.

அந்தவகையில் டிஎன்பிஎஸ்சி போட்டிகளில் தமிழ் மொழித் தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 40 மதிப்பெண்கள் பெற வேண்டும் என்றும், அவ்வாறு தமிழ் மொழித் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால, அவர்களின் பிற தாள்கள் மதிப்பீடு செய்யப்பட மாட்டாது என்றும் அரசு அறிவித்தது.

 இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி,மற்றும் டிஆர்பி,காவலர் போட்டித் தேர்வுகளில், மாற்று திறனாளிகளுக்கு தமிழ் மொழி தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. 

-இவ்வாறு தமிழக அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com