11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!

11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப் பட்டுள்ளன.

-இதுகுறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது:

தமிழகத்தில்  11-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் சற்று முன்பு வெளியிடப்பட்டது. www.tnresults.nic.in, மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப் பட்டுள்ளது. மாணவர்கள் இந்த இணையதளங்களில் சென்று தங்களுடைய பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். 

11ஆம் வகுப்பு தேர்வு எழுதிய 94.99% மாணவிகள் மற்றும் 84.86% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் இந்த பொதுத்தேர்வை 41,376 மாணவர்கள் எழுதவில்லை.

-இவ்வாறு தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மாநில அளவில் 95.56% தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. மேலும் 95.44% தேர்ச்சி பெற்று விருதுநகர் 2-வது இடமும், 95.25% தேர்ச்சி பெற்று மதுரை 3-வது இடமும் பிடித்துள்ளது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com