பானி பூரிக்கு நேபாளத்தில் தடை!

பானி பூரிக்கு நேபாளத்தில் தடை!
Published on

நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் சுகாதாரமற்ற தண்ணீரால் செய்யப்பட்ட பானி பூரியை உண்டதால் அங்கு பலருக்கு காலரா நோய் ஏற்பட்டுள்ளது.  இதையடுத்து நேபாளத்தில் லலித்பூர் மாநகராட்சியில்; பானி பூரிக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.

-இதுகுறித்து நேபாள சுகாதாரத்துறை மற்றும் மக்கள்தொகை அமைச்சகம் தெரிவித்ததாவது:

நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் கடந்த சில நாட்களாக காலராவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பானி பூரியில் பயன்படுத்தப்படும் தண்ணீரில் காலரா நோய் பரப்பும் பாக்டீரியாக்கள் இருப்பதாகக் கண்டறியப் பட்டதையடுத்து பானி பூரி விற்பனைக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.

இதுவரை காத்மாண்டுவில் காலராவால் பாதிக்கப் பட்டவர்கள் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. மேலும் வேறு யாருக்கேனும் காலரா அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள சுகாதார நிலையத்திற்குச் செல்லுமாறு அறிவுறுத்தப் பட்டிருக்கிறார்கள்.

-இவ்வாறு நேபாள சுகாதாரத்துறை  மற்றும் மக்கள்தொகை அமைச்சகம்  தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com