ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம்: கோவா முதல்வர் அதிரடி!

ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம்: கோவா முதல்வர் அதிரடி!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

நாட்டில் சமீபத்தில் 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடந்து முடிந்ததில் கோவா உட்பட 4 மாநிலங்களில் பிஜேபி கட்சி வெற்றி பெற்றது.

இதையடுத்து கோவா முதல்வராக பிரமோத் சாவந்த் 2-வது முறையாக பதவியேற்றுக் கொண்டார் . அவருடன் எட்டு பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர் .

இதையடுத்து கோவா புதிய அமைச்சரவையின் முதல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது .அதில் தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதியின்படி ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டரை ஒவ்வொரு வீட்டுக்கும் இலவசமாக அளிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மனிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவா முதல்வர் பிரமோத் சாவந்த தன் டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டதாவது:

கோவாவில் இந்த  புதிய நிதியாண்டு முதல் ஆண்டொன்றுக்கு  ஒவ்வொரு வீட்டுக்கும் தலா  3 இலவச சிலிண்டர் விநியோக திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

-இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்..மேலும் இரும்புத் தாது சுரங்க தொழிலை மீண்டும் ஊக்குவிப்பது மற்றும் வேலை வாய்ப்பை உருவாக்குவது ஆகியவற்றிற்கும் முன்னுரிமை அளிக்கப் போவதாகவும்  கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com