அமாவாசைக்கு ராமேஸ்வரம் குவிந்த மக்கள்; கடல்நீர் உள்வாங்கியதால் அச்சம்!

அமாவாசைக்கு ராமேஸ்வரம் குவிந்த மக்கள்; கடல்நீர் உள்வாங்கியதால் அச்சம்!

இன்று அமாவாசை தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடற்கரையில் முன்னோருக்கு திதி கொடுப்பதற்காக ஏராளமான மக்கள் வந்து குவிந்தனர். இந்நிலையில் கடல்நீர் பல அடி தூரத்திற்கு உள்வாங்கியதால் பக்தர்கள் கடலில் இறங்கிக் குளிக்க அச்சம் அடைந்தனர்.

வைகாசி மாதம் அமாவாசை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதபுரம் சுவாமி கோயில் மற்றும் அக்னி தீர்த்த கடற்கரையில் திரண்ட மக்கள் புனித நீராடி மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். தொடர்ந்து கோயிலின் உள்ளே உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி சாமி தரிசனம் செய்தனர். இதனிடையே கடற்கரையில் சுமார் 50 அடி தூரத்திற்கு கடல்நீர் உள்வாங்கியதால் பக்தர்கள் கடலில் இறங்கி குளிக்க இயலாமல் திணறி வருகின்றனர்.இதையடுத்து கடலோரப் பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ராமேஸ்வரத்தில் கடந்த சில நாட்களாகவே கடல்நீர் உள்வாங்குவதும், கடல் சீற்றம் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com