நடிகர் அஜித் குருவாயூர் கோவிலில் சுவாமி தரிசனம்: வைரல் புகைப்படம்!

நடிகர் அஜித் குருவாயூர் கோவிலில் சுவாமி தரிசனம்: வைரல் புகைப்படம்!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

பாலிவுட் சினிமா தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'வலிமை' திரைப்படம் வசூலை வாரிக் குவித்துள்ளது. திரையரங்குகளில் சக்கைபோடு போடும் நிலையில், ஓடிடி தளத்திலும் இந்த படம் சூப்பர்-டூப்பர் ஹிட் ஆகியுள்ளது.

இந்நிலையில் வலிமை படத்தை தொடர்ந்து, இதே படத்தின் டீம் அடுத்ததாக ஏகே-61 படத்தை தயாரிப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

நடிகர் அஜித்தின் 61-வது படமான 'ஏகே-61' படத்தில் அவருக்கு வில்லன் மாதிரியான் ரஃப் அண்டு டஃப் கேரக்டர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளத்து. இதில் அஜீத்தின் வித்தியாசமான காதனி, கண்ணாடி, ஹேர் ஸ்டைல் ஆகியவை ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தன.

ஏகே-61 படத்தை போனிகபூர் தயாரிக்க, ஹெச். வினோத் இயக்குகிறார். இந்த புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 2-வது வாரத்திலிருந்து தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்தநிலையில் ஏ.கே-61 படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக நடிகர் அஜித் குருவாயூர் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் பரவி படு வைரலாகி வருகிறது.

logo
Kalki Online
kalkionline.com