கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள்: முத்தமிழ் அறிஞர், கலைஞரின் சரித்திர சாதனைகள் இதோ!

கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் (03/06/1924) சிறப்புப் பார்வை! தமிழகத்தை மாற்றியமைத்த அவரது வரலாற்றுச் சாதனைகள் மற்றும் சமூகநீதித் திட்டங்களின் தொகுப்பு இதோ.
M K Karunanidhi Achievement History
M K Karunanidhi Achievement HistoryAI Image
Updated on
Kalki Strip
Kalki Strip

கருணாநிதி - ஐந்தெழுத்து மந்திரச்சொல். ஆம் கருணாநிதி அந்த பெயருக்குப் பின்னால்தான் எவ்வளவு பொிய வரலாறு.

வரலாற்று நாயகன், முத்தமிழ் அறிஞர், தமிழகத்தின் விடிவெள்ளி, திருக்குவளை முத்துவேலர் - அஞ்சுகம் அம்மையார் அவர்களின் புதல்வர் கருணாநிதி பிறந்தநாள் (03/06/1924) ஜூன் மாதம் மூன்றாம் நாள் கொண்டாடப்படுகிறது.

அவரது பிறந்த நாளில் அவரின் சாதனைகளோடு உலா வருவோம்.

தலை சிறந்த சிந்தனையாளர், முற்போக்கு எழுத்தாளர், சமூக நீதியின் சங்கநாதம், திரைப்பட வசனகர்த்தா, கட்சியின் தலைவர், தமிழக முதல்வர், பல நல்ல திட்டங்களை செயல்படுத்தியவர் என அழியாத முத்திரை படைத்த பன்முகத்தன்மை கொண்டவர்.

தனது பதினான்காவது வயதில் அரசியல் பிரவேசம். பள்ளிப் பருவத்தில் இந்தி எதிா்ப்பு போராட்டத்தை கையில் எடுத்தவர் என்பதை வரலாறு கூறும்.

சிறுவயதிலேயே சமுக நீதிக்காக போராடியவர் என்ற பெருமைக்கு சொந்தமானவர்.

தமிழ் திரையுலகில் தனது புரட்சிகரமான சமுதாய சீா்திருத்த கருத்துகளை மக்களிடம் கொண்டு சென்றவர்.

ராஜகுமாாி, மந்திாிகுமாாி, போன்ற படங்கள் இவரது வசனங்களால் மெருகேறின.

தமிழ் மீது தீராத பற்று கொண்டவர். தூக்குமேடை, மணிமகுடம் போன்ற நாடகங்கள் இவரை பெயரைச் சொல்லியதே உண்மை.

பல்வேறு திரைப்படங்களுக்கான கதை மற்றும் வசன எழுத்தாளர். பல நாடகங்கள், பலகாவியங்கள், பல படைப்புகள் காலத்தால் அழியாதவை.

அதற்கு பூம்புகாா் படம் ஒன்றே சாட்சி. இவரது முக்கிய படைப்புகளான நெஞ்சுக்குநீதி, சங்கத்தமிழ், குறளோவியம், பொன்னர்-சங்கர், இந்த படைப்புகளைப் போல பல்வேறு படைப்புகள் காலத்தால் அழியா கலைப் பெட்டகம் என்றே சொல்லலாம்.

ஈரோடு பொியார் மீது பற்று கொண்டு கொள்கைப் பிடிப்பால் நீதிக் கட்சியில் அரசியல் வாழ்வு தொடங்கி பின்னர் அறிஞர் அண்ணாவுடன் இணைந்து 1949ல் தி.மு.க.வை உருவாக்கியவர்.

எம்.ஜி.ஆருடன் நாற்பது ஆண்டுகால நட்பு கொண்டவர்.

1969ல் அறிஞர் அண்ணா மறைவுக்குப் பின் எம்.ஜி.ஆாின் முயற்சியோடு தமிழக முதல்வர் பதவிக்கு வந்தாா்.

குளித்தலை தொடங்கி, திருவாரூா் தொகுதிவரை பதிமூன்று முறை சட்டமன்ற உறுப்பினா்.

1969, 1971, 1989, 1996, 2006, என ஐந்து முறை முதல்வர் பதவியை அலங்கரித்து வரலாற்று சாதனை படைத்தவர்.

மனிதனை மனிதனே இழுக்கும் கைரிக்க்ஷா முறையை ஒழித்தவர்.

இதையும் படியுங்கள்:
அரசியல் தலைவர்களின் இந்த 'தனித்துவ' குணங்கள் மக்களை ஈர்ப்பது எப்படி?
M K Karunanidhi Achievement History

கல்வியில் புரட்சி, எண்ணிலடங்கா மேம்பாலங்கள், வரலாற்று பெருமை சொல்லும் கட்டடங்கள், சமத்துவபுரம், வள்ளுவர்கோட்டம், உழவர் சந்தை, வீட்டுமனைப் பட்டா, இலவச உயர்தர மருத்துவசதி, இலவச வீடு, மகளிா் குழுக்கள், பிற்பட்டோா் நல ஆணையம், தமிழ் வளா்க்க தமிழ்ப் பூங்கா, கன்னியாகுமரியில் 133 அடி உயரத்தில் கடல் நடுவே திருவள்ளுவர் சிலை, நெசவாளர், விவசாயிகளுக்கு இலவசமின்சாரம், வேலைவாய்ப்பை பெருக்க டைடல்பாா்க், எல்காட் இப்படி அவரது ஆட்சியில் நிறைவேற்றிய பல திட்டங்களை பட்டியலே போடலாம்.

மத்திய அரசுடன் இணக்கமான போக்கு, இந்திரா காந்தி மற்றும் வாஜ்பாய் போன்றவர்களுடன் நட்பு கொண்டதன் மூலம் உலகத் தலைவர்களுள் ஒருவரானாா்.

காங்கிரஸ் அரசில் மத்திய மந்திாி பதவி. அதன் மூலம் தமிழ்நாட்டிற்கு நிறைய திட்டங்களை நிறைவேற்றிய பெருமைக்கு சொந்தக்காரர்.

கட்சியையும் ஆட்சியையும் கட்டுக்கோப்பில் வைத்திருந்த பெருமை. தமிழுக்காக போராடியவர்.

இப்படி எண்பது ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் தமிழ்நாட்டின் வளா்ச்சிக்காக பல திட்டங்களை செயல்படுத்திய ஓய்வறியா சூாியன் 07.08.2018 ல் மறைந்தது கண்டு உலகமே அதிா்ச்சியானது.

சாமர்த்தியமாய், எதுகை மோனையாய் பேசும் திறன் கொண்ட கலைஞர் கடைசி மூச்சுவரை சட்டமன்ற உறுப்பினராகவே (திருவாரூா்) பணி புாிந்து காலமானாா்.

அவர் மறைந்தாலும் அவரது புகழ், பெருமைகள், அவர் தீட்டிய திட்டங்களை வரலாறு பேசும்!

logo
Kalki Online
kalkionline.com