கமல்ஹாசனுக்கு கொரோனா: பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகுகிறார்?!

கமல்ஹாசனுக்கு கொரோனா: பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகுகிறார்?!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்லதால், அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதிலிருந்து விலகப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து கம்லஹாசன் தரப்பிலிருந்து வெளியான தகவல்:

கமல்ஹாசனுக்கு சமீபத்தில் அமெரிக்கா சென்று திரும்பியதையடுத்து கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதால், கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து சென்னையில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளது.

–இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 5-வது சீசனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகச்சியில் இருந்து விலக இருப்பதாகவும், அவருக்கு பதிலாக அவரின் மகளான ஷ்ருதி ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

logo
Kalki Online
kalkionline.com