தமிழகம் கண்டெடுத்த தன்னிகரில்லா தலைவர்.
ஓய்வரியா இளஞ்சூாியன்.
திருக்குவளை தந்த திருச்செல்வன்.
திகட்டாத புகழ்கொண்ட திராவிட நாயகன்.
பகுத்தறிவு பகலவன்.
பாா்போற்ற அரசாட்சி செய்த அறிஞர் பெருமகனாா்.
முத்தமிழ்அறிஞர்.
முத்தமிழ் தலைவர்.
மூச்சே தமிழ், முழுமூச்சாய் தமிழ் வாழ போராடிய போராளி.
பிடிவாதம் அவர்தம் உடன் பிறப்பு.
உடன்பிறப்புகளே, அவரின் உயிா்ப்பு.
அதிலே யாருக்குமில்லை வியப்பு.
கொண்ட கொள்கையில் நெறி தவறாத குணக்குன்று.
அரசியலில் தனிஇடம் பிடித்த ராஜதந்திாி.
சட்டமன்ற உறுப்பினராய் குளித்தலையில் கால் பதித்த பன்முகம்.
திருவாரூாில் பணி நிறைவு செய்த திருவருட் செல்வரான திராவிட நாயகன்.
ஐந்துமுறை முதல்வராய், முத்தான திட்டம் கொணர்ந்த முத்துவேலரின் வாாிசு.
அஞ்சுகம் அம்மையாா் பெற்றெடுத்த அருந்தவப் புதல்வன்.
அண்ணாதுரையின் அன்புத்தம்பிகளில் ஓாிருவரில் ஒருவர்.
துணிச்சலுக்கு பெயர்போனவர்.
ஐந்தெழுத்துக்கும் அவருக்கும் அத்தனை பிணைப்பு.
தமிழனின் உயிா்த்தோழன்.
சிந்தனைச்சிற்பி.
சீா்திருத்தவாதி.
பாா்போற்ற அரசாட்சி செய்த மனசாட்சியின் நாயகர்.
கருணாநிதி பெயர் ஐந்தெழுத்து.
தந்தை முத்து வேல் ஐந்தெழுத்து.
தாயாா் அஞ்சுகம் ஐந்தெழுத்து.
சட்டமன்ற உறப்பினராக்கிய குளித்தலை ஐந்தெழுத்து.
தஞ்சாவூா் ஐந்தெழுத்து.
மூச்சுள்ளவரை வாழ்நாள் எம்எல்ஏ திருவாரூா் ஐந்தெழுத்து.
அவர் அரசியல் ஆசான் அண்ணாதுரை ஐந்தெழுத்து.
இவர் ஒரு அரசியல் ஜாம்பவான் அதுவும் ஐந்தெழுத்து.
அரசியல் ஐந்தெழுத்து.
அரசாட்சி ஐந்தெழுத்து.
அரசாளவைத்த தமிழகம் ஐந்தெழுத்து.
அரசாட்சியால் முன்னேற்றம் கண்ட தமிழ்நாடு ஐந்தெழுத்து.
திரைக்கதை வசனம் எழுதிய படம் பராசக்தி ஐந்தெழுத்து.
அபிமன்யு திரைப்படம் ஐந்தெழுத்து.
அவரால் வாழ்ந்த இலக்கியம் ஐந்தெழுத்து.
வரலாற்றுக் காவியம் பூம்புகாா் ஐந்தெழுத்து.
ஆட்சி செய்த சட்டசபை ஐந்தெழுத்து.
வசனம் எழுதிய தூக்குமேடை ஐந்தெழுத்து.
கதை வசனம் எழுதிய ராஜகுமாாி ஐந்தெழத்து.
ஐந்துமுறை முதல்வர் பதவியாம் அதுவும் ஐந்தெழுத்து.
1954ல் எழுத்தாளராக்கிய குடியரசு பத்திாிகை ஐந்தெழத்து.
மொத்தத்தில் அவர் ஒரு தமிழ்நாடு தந்த இந்தியன் அதுவும் ஐந்தெழுத்து.
பன்முக வித்தகர், ஏழைகளின் விடிவெள்ளி.
மறைந்த முதல்வர், முத்தமிழ் அறிஞர் முத்துவேல் கருணாநிதி அவரது நினைவுநாளில் 7.8.2025ல் அவரது கொள்கைகளை நினைவு கூறுவோம்.