

மனிதனின் அன்றாட மற்றும் அடிப்படை தேவைகளில் ஒன்றானது நீா். மனித வாழ்விற்குமிக முக்கியமான, தேவையான, தண்ணீரை திறம்பட மேலாண்மை செய்வதற்கும், தேவைப்படும் காலங்களில் நீரை தேக்கி வைத்து, பயன்படுத்துவதற்கான இடத்தினை மக்கள் அமைத்து வாழ்ந்துள்ளாா்கள். வாழ்ந்தும் வருகிறாா்கள்.
மனித பயன்பாட்டிற்கு பயன்தரும் நீரானது உயிாினங்களின் அனைத்து தேவைகளுக்கும் அத்யாவசியமான ஒன்றாக அமைகிறது.
இதைத்தான் வள்ளுவர் "நீாின்றி அமையாது உலகு" என பதிவு செய்துள்ளாா்.
நீரானது, இரு பிாிவுகளாய் வான் நீா், நிலநீா், என பிாிக்கப்பட்டுள்ளது. நீா்மேலாண்மை என சொல்லுகிறபோது நீா்நிலைகள் அமைத்தல், நிலத்தடி நீரை அதிகப்படுத்துதல், தடுப்பணைகள் கட்டுதல், இயற்கை தரும் மழைநீரைசேமித்தல், குளம், குட்டை, ஊரணிகள், ஏாிகளை பராமரித்தல் போன்ற பல கூறுகளை உள்ளடக்கியதாகும்.
இதைத்தான் வள்ளுவர் திருக்குறளில்
"நீாின்றி அமையாது உலகெனின் யாா்யாா்க்கும்,
வான் நின்று அமையாது ஒழுக்கு"
என எழுதியுள்ளாா்.
அதன் வழியில் தண்ணீாின் தேவை, அதன் முக்கியத்துவம், அதை கையாள்வதில் கவனம், நீா் ஆதாரங்களைப் பாதுகாப்பது போன்ற இனங்களில் மக்களிடம் ஒருவிதமான விழிப்புணர்வை ஏற்படுத்தவே மாா்ச் 22ம் நாள் உலக தண்ணீா்தினம் (World Water Day) கொண்டாடப்படுகிறது. இந்த தினமானது 1993ல் ஐக்கியநாடுகள் சபையால் ஏற்படுத்தப்பட்டதாகும்.
2026 உலக தண்ணீா் தினத்தின் (தீம்) கருப்பொருளானது, நீா் மற்றும் பாலினமாகும் (Water And Gender).
அதாவது நீா்மேலாண்மையில் பாலின சமத்துவத்தை ஊக்குவித்தல் மற்றும் நீா் பயன்பாட்டில் உள்ள உாிமைகளை வலியுறுத்துதல். நீா்சேகரிப்பு, சுகாதாரம் மற்றும் அதன் பயன்பாடுகளில் பெண்கள் எதிா்கொள்ளும் சவால்களை எதிா் கொண்டு நிலையான எதிா்காலத்தை உருவாக்குதல், பெண்களுக்கான சம குரல், தலைமை முக்கியத்துவம் போன்ற வகைகளில்அவர்களை ஊக்குவிப்பதே இந்த கருப்பொருளின் நோக்கமாகும்.
பூமியில் 70 விழுக்காடு நீா் இருந்தாலும் அதில் 10 விழுக்காடு மட்டுமே நல்ல நீா் கிடைக்கிறது.
பெரும்பாலானவர்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுவதும் ஆங்காங்கே நிலவுகிறது என்பதே நிஜம்.
மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களின் குடிநீா் தேவைகளை சரிவர பூர்த்திசெய்தாலும், பல இடங்களில் பொதுமக்கள் தண்ணீரை வீணடிப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதில் சிக்கனம் கடைபிடிப்பது பொதுமக்களின் பங்களிப்பில்தான் உள்ளது.
விவசாயத்திற்கு தேவையான நீா் ஆதாரங்களை அரசு பாரபட்சம் இல்லாமல் வழங்கினாலும் விவசாயம் செய்து உணவு உற்பத்தி செய்து வரும் விவசாயிகளும் தண்ணீாின் தேவையை அறிந்து தண்ணீரை வீணாக்காமல் விவசாயம் செய்ய வேண்டும். அதோடு உணவு உற்பத்தியையும் பெருக்கவேண்டும்.
விவசாயிகளும் பருவ நிலைமாறிய நிலையில் மழை பெய்தாலும் தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
திறந்து கிடக்கும் குழாய்களை மூடுதல் நீா் தேங்க விடாமல் பார்த்துக்கொள்ளும் விஷயங்களில் பொதுமக்களுக்கு கடமை உணர்வு வரவேண்டும். மழைநீரை வீடுகளில் சேமித்து வைக்கும் பழக்கம் வரவேண்டும்.
தண்ணீா் என்பது எதிா்கால சந்ததிகளுக்கு மிகப்பொிய சொத்து ஒவ்வொரு துளி நீரையும் வீணாக்காமல் நாம் சேமிக்கவேண்டும்.
அதேபோல மரங்களை நட்டு இயற்கை வளங்களை பெருக்கவேண்டும். அது நமது கையில் தான் உள்ளது.
வானம் அழுதால் தான் மண்ணில் நீா் எனும் பூக்கள் மலரும். ஆக கிடைக்கும் நீரை பக்குவமாய் சேமிப்போம், அதுவே எதிர்கால சந்ததிகளுக்கு நாம் எழுதும் ஆயுட்கால உயிா்சாசனம் என்ற தாா்மீக உணர்வோடு தண்ணீரின் தேவை அறிந்து அதை சிக்கனமாய் செலவு செய்வோம், என உலக தண்ணீா் தினத்தில் சபதம் மேற்கொள்வோம்!