

நாட்டின் பாதுகாப்பு விழிப்புணர்வை ஊக்குவித்தல், விபத்துகளைத் தடுத்தல், உற்பத்தித்திறனை மேம்படுத்துதல், அவசரகால தேவைகளை பூா்த்தி செய்வது, பொதுவாக பயங்கரவாத அச்சுறுத்தல்களை நவீன தொழில்நுட்ப உதவியுடன் எதிா்கொள்வது, இப்படிப்பட்ட சேவைகளை செய்வதை கெளரவப்படுத்தும் விதமாக 1966ல் நிறுவப்பட்ட தேசிய பாதுகாப்பு கவுன்சில் (NSC) தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் 1972 முதல் மாா்ச் 4ம் நாள் தேசிய பாதுகாப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.
அதுமட்டுமல்லாது, தொழிற்சாலைகள், பணியிடங்களில், விபத்துகளைத் தவிர்க்கவும், பாதுகாப்பு விழிப்புணர்வுகளை மேம்படுத்தவும், இந்த நாளின் முக்கிய நோக்கமாகவும் கருதப்படுகிறது.
பொதுவாக மனித இழப்புகளை தவிா்ப்பதற்குாிய முன்னேற்பாடுகளையும் செய்வது குறித்தும் வலியுறுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
நாட்டின் பாதுகாப்பு படையினர்கள் பொதுமக்கள் எந்த வித அச்சுறுதல்களுக்கும் ஆளாகாமல் வாழவேண்டும். அதற்கான பாதுகாப்பினை வழங்குவதே தேசிய பாதுகாப்பின் பொிய பங்காகும்.
நாட்டின் நன்மை, இறையாண்மை, ஒற்றுமை, சுதந்திரம், இவைகளை கடைபிடித்து அதற்கு ஒரு சங்கடமும் நேராத வகையில் அல்லும் பகலும் அயராது உழைக்கும் நமது மரியாதைமிகு ராணுவ வீரர்களை இந்த நாளில் கெளரவப்படுத்த வேண்டிது ஓவ்வொரு இந்தியனின் கடமையாகும்.
ராணுவ வீரர்கள், காவல்துறையினர் மற்றும் கமாண்டோக்களும் இதில் அடங்குவாா்கள்.
தேசிய பாதுகாப்பில் இந்தியாவின் பங்கானது, எல்லைபாதுகாப்பு, பயங்கரவாத எதிா்ப்பு மற்றும் உள்நாட்டு அமைதியை பேணிக்காத்தல் போன்றவை அடங்கும் என்பதையாரும் மறக்கவோ மறுக்கவோ முடியாது. இதில் முக்கிய பங்கு வகிப்பது முப்படைகளே என்றால் அது மிகையாகாது.
இதனில் முப்படைகளும் இந்திய இறையாண்மையை பாதுகாப்பதுடன், உளவுத்துறையை பலப்படுத்துதல், எல்லை தாண்டிய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுத்தல், (Surgical Strikes) மேலும் (AI) செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல் மூலம் இந்தியாவுக்கு போதுமான பாதுகாப்பை வழங்கத்தவறுவதில்லை.
அதோடு எல்லை தாண்டிய பயங்கர வாத செயல்களுக்கு பதிலடியாக தரை வழி, வான் வழி, கடல் வழி தாக்குதல்களையும் உடனுக்குடன் வழங்கி வருவதும், தேசிய பாதுகாப்பின் முக்கிய அம்சமாகும். அதே நேரம் நமது பாதுகாப்பிற்காக மாநில அரசுகளும் தனது பங்களிப்பை நடுவன் அரசுக்கு வழங்கவேண்டும்.
ராணுவ தளவாடங்கள் மேலும் அதிக எண்ணிக்கையில் இருப்பதும் நமக்கான பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் என்பதும் உண்மையே!
பல புதிய தொழில்நுட்பங்களை நாம் பயன்படுத்தி சர்வதேச அளவில் இந்தியா ஒரு வல்லரசு என்பது நிருபிக்கப்பட்டு வந்தாலும் பொதுமக்களின் பங்களிப்பு எந்த வித சாயமும் பூசப்படாமல் வலிமை மிகு பாரதம், வலுவான பாரதம், என்ற நோக்கத்தில் அமைவதே நமது இந்தியாவிற்கு பெருமை சோ்க்கும்.
ஆக தேசிய பாதுகாப்பில் நமக்கும் பொிய பங்கு உண்டு என்பதை உணர்ந்து செயல்படுவதே ஒவ்வொரு இந்தியனின் கடமையாகும்.