
மே தினம், தொழிலாளர்கள் தினம் என்றெல்லாம் அழைக்கப்படுகின்ற இன்றைய தினத்தில்... பாரெங்கும் ஆங்காங்கே பணிபுரிகின்ற அனைத்து தொழிலாளர்களுக்கும் கைகூப்பி நன்றி செலுத்துவோம்!
கொளுத்தும் வெயிலிலும் மழையிலும் தன்னலம் பாராது நம்முடைய நலனுக்காக 365 நாளும் சாலையை சுத்தம் செய்யும் மற்றும் நாற்றத்தை தாங்கி கொண்டு கால்வாய்களையும், பொது இடங்களில் உள்ள கழிவறைகளையும் சுத்தம் செய்யும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கும்,
வருடம் முழுவதும் சாலையில் உட்காரமல் கால் கடுக்க நின்று வாகனங்களை கட்டுபடுத்துகின்ற போக்குவரத்து காவல் துறை ஊழியர்களுக்கும் மற்றும் மக்களின் நலனுக்காக தீபாவளி பொங்கல் என்று எந்த பண்டிகைக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் பாடுபடும் காவல்துறை ஊழியர்களுக்கும்,
மனைவியையும் பெற்றோரையும் குழந்தைகளையும் விட்டு பிரிந்து தன் உயிரை பணயம் வைத்து நம் நாட்டின் எல்லையில் இருந்து கொண்டு இந்திய மக்களை காப்பாற்றும் நம் இராணுவ வீரர்களுக்கும்,
இரவு பகல் பாராமல் நமக்கு வைத்தியம் செய்து நம் உயிரை மீட்டு கொடுக்கும் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் மற்றும் மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும்,
நம்மை எல்லா இடத்திற்கும் எடுத்து செல்கின்ற மற்றும் நமக்கு தேவையான உணவு, தானியம், துணி போன்ற பொருட்களை ஏற்றி கொண்டு சேர்க்கின்ற அனைத்து வாகன ஊர்தி ஓட்டுநர்களுக்கும்,
வெவ்வேறு நகரங்களுக்கும் நாட்டிற்கும் நம்மை பத்திரமாக கொண்டு சேர்க்கும் விமானம், பேருந்து மற்றும் இரயில் ஓட்டுநர்களுக்கும்,
இரயில் நிலையம், பேருந்து நிலையம், விமான நிலையம், அஞ்சலக அலுவலகம், வானொலி நிலையம் மற்றும் அனைத்து போக்குவரத்து துறைகளில் பணி புரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும்,
கல்வித் துறையில் இருக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் மற்றும் பணியாளர்களுக்கும்,
நமக்கு மிக இன்றியமையாத மின்சாரத்தையும் தண்ணீரையும் தவறாமல் வழங்கி நிர்வாகம் செய்யும் ஊழியர்களுக்கும்,
செய்திகளை ஒரு நாள் கூட விடாமல் உடனுக்குடன் அச்சடித்து விநியோகம் செய்யும் பத்திரிக்கை அலுவலக தொழிலாளர்களுக்கும் மற்றும் அதை வீடு வீடாக கொண்டு சேர்க்கும் தொழிலாளர்களுக்கும்,
இணையதளம் மூலமாக செய்திகளையும் கட்டுரைகளையும் விமர்சனங்களையும் தொகுத்து வெளியிட உதவும் அனைத்து பணியாளர்களுக்கும்,
தொலைக்காட்சியில் பணி புரிகின்ற அனைத்து பணியாளர்களுக்கும்,
நம் வீடுகளில் தினமும் அன்றாட வீட்டு வேலை புரியும் பணியாளர்களுக்கும்,
இரவு பகல் வயலில் கஷ்டபட்டு உழைத்து நமக்கு வேண்டிய உணவையும் தானியத்தையும் காய்கறிகளையும் பழங்களையும் பயிரிடும் மேன்மை பொருந்திய நம் இந்திய விவசாயிகளுக்கும்,
சாலையோரத்தில் உட்கார்ந்து கொண்டு விற்பனை செய்யும் வியாபரிகளுக்கும், மீன் பிடிப்பவர்களுக்கும், ஆடு மாடுகளை மேய்த்து பராமரித்து நமக்கு பால் தயிர் போன்றவற்றை அளிக்கும் இடையர்களுக்கும், மர சாமான்களை தயாரிக்கும் தச்சர்களுக்கும்,
நம் கால்களை பாதுகாக்க உதவும் காலணிகளை தைப்பவர்களுக்கும், உடலை மறைக்க உதவும் துணிகளை நெய்யும் நெசவாளர்களுக்கும் மற்றும் தைப்பவர்க்களுக்கும், மற்றும் தொழிற்சாலைகளிலும், அலுவலகங்களிலும், வணிக வளாகத்திலும், கடைகளிலும், ஓட்டல்களிலும், இன்னும் இன்னும் ஆங்காங்கே பணிபுரிகின்ற அனைத்து தொழிலாளர்களுக்கும் நம்முடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்வோம்!
வாழ்க தொழிலாளர்கள், வளர்க அவர்களது சேவை !