பொறியாளர்களின் மணிமகுடம் விஸ்வேஸ்வரய்யா - ஒரு சுவாரசியமான செய்தி!

Mokshagundam Visvesvaraya
Mokshagundam Visvesvaraya
Published on

இன்றைய நவநாகரிக உலகத்தை கட்டமைப்பதில் பொறியாளர்களின் பங்கு மிக முக்கியமானது. சாத்தியமில்லாதவற்றை கூட அறிவியல் துணை உண்டு சாத்தியமாக்கும் வல்லமை படைத்தவர்கள் பொறியாளர்கள்.

ஒரு மலையை சல்லி சல்லியாக உடைத்து, மண்ணாக மாற்றுவது. அந்த மண்ணை கொண்டு மாபெரும் கட்டடங்களை எழுப்புவது பொறியாளர்கள் தான். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பவர்களும் பொறியாளர்கள் தான். இத்தகைய பொறியாளர்களை போற்றும் வகையில் ஆண்டுதோறும் பொறியாளர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 

1860 ஆம் ஆண்டு இந்தியாவின் புகழ்பெற்ற பொறியாளர் விஸ்வேஸ்வரய்யா பிறந்தார். கர்நாடக மாநிலம் முட்டனஹள்ளி கிராமத்தில் பிறந்தவர். அவரது முன்னோர்கள் ஆந்திர மாநிலம் மூக்ச குண்டம் பகுதியைச் சேர்ந்தவர்கள். எனவே இவருக்கு மோக்ஷாகுண்டம் விஸ்வேஸ்வரய்யா என பெயர் சூட்டினார்கள்.

தனது 12 வயதிலேயே தந்தையை இழந்த விஸ்வேஸ்வரய்யா, மிகவும் கஷ்டப்பட்டு கல்வியை தொடர்ந்தார். சென்னை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டத்தையும், புனே அறிவியல் கல்லூரியில் கட்டட பொறியியல் பட்டத்தையும் பெற்றார். அரசாங்க பணியில் இருந்தாலும் புதிய விஷயங்களை செய்து பார்ப்பதில் ஆர்வமாக இருந்தார். விஸ்வேஸ்வரய்யா பாசனத்திற்கான புதிய முறையை உருவாக்கினார்.

இதையும் படியுங்கள்:
கல்கி விருது வழங்குதல் மற்றும் அமரர் கல்கி பற்றிய காணொளி ஆவணம் வெளியீடு! - ஒரு முன்னோட்டம்!
Mokshagundam Visvesvaraya

தானியங்கி வெள்ள மதகை உருவாக்கி, நீர்த்தேக்கத்தில் பயன்படுத்தி வெற்றி பெற்றார். வெள்ளத்தில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கான திட்டத்தை வகுத்தார். துறைமுகங்களில் கடல் அரிப்பு ஏற்படாமல் இருப்பதற்கான தடுப்பு அமைப்புகளை உருவாக்கினார். காவிரி ஆற்றின் குறுக்கே இவரால் கட்டப்பட்ட கிருஷ்ணராஜ சாகர் அணை அப்போது ஆசியாவிலேயே மிகப்பெரிய அணையாக இருந்தது. விஸ்வேஸ்வரயாவுக்கு புகழைத் தேடித்தந்தது. 1894 ஆம் ஆண்டு மைசூர் அருகில் ஆசியாவிலேயே முதல் நீர்மின் உற்பத்தி நிலையம் அமைக்கவும் காரணமாக இருந்தார்.

விருப்ப ஓய்வுக்கு பின்னர், மைசூர் மன்னரின் திவானாக பணியாற்றினார். பத்ராவதி எஃகு ஆலை, மைசூர் பல்கலைக்கழகம், தொழிற்சாலைகள், அரசு பொறியியல் கல்லூரி போன்றவற்றை உருவாக்கினார். இவருடைய சேவைகளை பாராட்டி ஆங்கில அரசாங்கம் 'நைட் கமாண்டர்' என்ற பட்டத்தை வழங்கியது. சுதந்திரத்திற்கு பிறகு 1955 ஆம் ஆண்டு இந்திய அரசு பாரத ரத்னா பட்டத்தை அளித்தது.

இந்திய பொறியியலின் தந்தை என்று கொண்டாடப்படும் விஸ்வேஸ்வரய்யா, 1962 ஆம் ஆண்டு தனது 101 வது வயதில் மறைந்தார். அவர் உருவாக்கிய அணைகளும் தொழிற்சாலைகளும் கல்வி நிறுவனங்களும் என்றும் அவர் புகழைச் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

இதையும் படியுங்கள்:
ரூபாய் நோட்டுகளில் எழுதுவது குற்றமா?
Mokshagundam Visvesvaraya

இவர் குறித்து சுவாரசியமான செய்தி ஒன்றும் பரவலாக பேசப்பட்டு வருகிறது அதாவது கிருஷ்ணராஜ சாகர் அணை கட்டி முடிக்கப்பட்டு, திறக்கப்படும் தருவாயில் அந்த அணைக்கட்டு மேல் பகுதியில் இவர் காரில் சென்றுள்ளார். அப்போது திடீரென தனது காரை நிறுத்த சொல்லி, மீண்டும் பின்புறமாக சென்று மறுபடியும் வரும்படி கூறியுள்ளார். சரியாக இரண்டு அல்லது மூன்று முறை செய்த பின்னர், அந்த இடத்தில் தரைப்பகுதியில் ஏதோ கோளாறு உள்ளது என்று அங்கிருந்து பொறியாளரிடம் கூறிவிட்டு, அதை சரி செய்யும் படி உத்தரவிட்டார். இதனால் குழம்பிப்போன அங்கிருந்த பொறியாளர்கள், விஸ்வேஸ்வரய்யா கூறியபடி அவர் சொன்ன இடத்தில் தரை பகுதியில் ஆய்வு செய்த போது அங்கு கோளாறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு இருந்த பொறியாளர்கள் அனைவரும் விஸ்வேஸ்வரய்யாவின் அறிவு கூர்மையை பாராட்டி தீர்த்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com