
ஒவ்வொரு வருடமும் ஜூலை 1ஆம் தேதி, தேசிய ஊழியர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அஞ்சல் துறையில் பணிபுரியும் ஊழியர்களின் கடின உழைப்பையும், சேவையும் போற்றி கௌரவிக்கிறார்கள். அஞ்சல் துறை இந்தியாவின் ஒரு முக்கியமான துறையாகும். மேலும் இந்த நாள் அத்துறை மற்றும் அதன் ஊழியர்களின் பங்களிப்பை நினைவுபடுத்துகிறது.
வரலாறு.
இந்த நாள் 1997 ஆம் ஆண்டு சியாட்டில் வாஷிங்டனில் அஞ்சல் ஊழியர்களை கௌரவிக்கும் வகையில் தொடங்கப்பட்டது பின் இது உலகம் முழுவதும் பரவியது. அஞ்சல் துறை பொருளாதார வளர்ச்சி, சமூக உள்ளடக்கம், பேரிடர் நிவாரண முயற்சிகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.
அஞ்சல் ஊழியர்களின் கடின உழைப்பு அவர்கள் செல்லும் கூடுதல் தொலைவுகள், மற்றும் நமது கடிதங்களை சரியான நேரத்தில் பெறச் செய்வதை உறுதி செய்தல், ஆகியவற்றிற்க்கு மதிப்பளிக்கும் நோக்கத்துடன் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
ராபர்ட் கிளைவ் 1766 ஆம் ஆண்டில் ஒரு வழக்கமான அஞ்சல் அமைப்பை நிறுவினார். வாரன் ஹேஸ்டிங்ஸ் 1774 ஆம் ஆண்டில் தபால் அலுவலகத்தை அமைக்க ஏற்பாடு செய்தார். 1786-ம் ஆண்டு ஜுன் 1-ம் தேதியன்று சென்னை பொது தபால் நிலையம் திறக்கப்பட்டது.
அஞ்சல் அலுவலகச் சட்டம்
XVII என்ற சட்டமானது 1854 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. தபால் அலுவலகத்தில் சேமிப்பு வங்கி 1882-ம் ஆண்டில் திறக்கப்பட்டது. கிராமப்புறங்களில் நம்பிக்கையான நினைப்பாக வழங்குகின்றனர். தபால் ஊழியர்கள் பலருக்கு அரசு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி உதவுகின்றனர். இந்த நாளில் நாடு முழுவதும் பல்வேறு வகையில் கொண்டாட்டங்கள் நடைபெறும். அஞ்சல் நிலையங்களில் ஐந்து லட்சம் ஊழியர்கள் பணி புரிகின்றனர்.
இதில் 2 லட்சம் நிரந்தர ஊழியர்களும், ஒன்றரை லட்சம் முதல் 2 லட்சம் வரை கிராம அஞ்சல் சேவகர்களும் அடங்குவர். கடந்த 1911 -ல் உலகின் முதல் விமான அஞ்சல் இந்தியாவில் தொடங்கியது. ஹிமாச்சலப்பிரதேசத்தின் 15,500 அடி உயரத்தில் உலகின் மிக உயரமான அஞ்சல் நிலையம் உள்ளது. ஸ்ரீநகரின் டால் ஏரியில் மிதக்கும் அஞ்சல் நிலையம், 2011ல் துவங்கப்பட்டது. 1983-இல் அண்டார்டிகாவில் |தஷிண கங்கோத்திரி 1 நிலையம் நிறுவப்பட்டது, குறிப்பிடத்தக்கது.
இந்த நாளில் அஞ்சல் ஊழியர்களின் அர்ப்பணிப்பையும், பங்களிப்பையும் பாராட்டுவோம் !